போட்டியை நேரில் காண வந்த குடும்பத்தினர்! விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த சிராஜ்!- வீடியோ இணைப்பு!

0
450

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 349 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது .

இந்திய அணியின் சார்பாக அபாரமாக ஆடிய சுப்மன் கில் மிகச் சிறப்பாக ஆடி ஒரு நாள் போட்டியில் தனது மூன்றாவது சதத்தையும் மற்றும் முதலாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார் . இதன் மூலம் இவர் இளம் வயதில் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் .

இதனைத் தொடர்ந்து 350 ரண்களை எடுத்தால் என்ற வெற்றிகழத்துடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது . அந்த அணியின் இன்பார்ம் பேட்ஸ்மேன் திவான் காணவே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜுன் பந்துவீச்சில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து 10 ரண்களில் ஆட்டம் இழந்தார்.

இது முகமது சிராஜ் பவர் பிளேவில் எடுக்கும் அவரது 24 வது விக்கட் ஆகும். சென்ற வருடத்திலும் பவர் பிளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் இவர் தான் . இன்றைய போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது . இது முகமது சிராஜின் சொந்த ஊர் .

இன்று அவரது ஆட்டத்தினை காண அவரது குடும்பத்தினரும் மைதானத்திற்கு வருகை புரிந்திருந்தனர் . தனது குடும்பத்தினர் முன்பாக பவர் பிளேயரில் மீண்டும் ஒரு விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார் சிராஜ்.தனது சொந்த மைதானத்தில் குடும்பத்தினர் முன் விளையாடி விக்கெட் வீழ்த்தியது முகமது சிராஜிக்கு உணர்ச்சி பூர்வமான ஒரு தருணமாக அமைந்தது. அந்த விக்கெட் வீடியோ இதனுடன் நீக்கப்பட்டுள்ளது.