உலக கோப்பைக்கு ரெண்டு தமிழ்நாட்டு பிளேயர்ஸ்க்கு கதவ இன்னும் அடைக்கல.. ரோகித் சர்மா மாஸ் அப்டேட்!

0
2098
Rohit

இன்று மதியம் இந்த மாதம் 30 ஆம் தேதி துவங்க இருக்கும் ஆசியக் கோப்பைக்கு 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 18-வது வீரராக சஞ்சு சாம்சன் அணியுடன் செல்கிறார்.

இந்த அணியில் இடது கை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று இருக்கும் நிலையில், அவரைப் போன்ற இடதுகை சுழற் பந்துவீச்சாளர் அக்சர் படேலும் இடம்பெற்று இருக்கிறார்.

- Advertisement -

இந்த அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற வலதுகை ஆப் ஸ்பின்னர்கள் ஒருவர் கூட கிடையாது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்தியாவில் உலகக்கோப்பை நடக்க இருப்பதால், இந்தத் தேர்வு முறை ரசிகர்களை குழப்பப்படுத்தி இருக்கிறது.

எனவே ரசிகர்கள் இதை முன்வைத்து அஸ்வின் இல்லை வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவரையாவது இந்திய அணிக்கு தேர்வு செய்திருக்க வேண்டும் என்று தங்களது விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறும் பொழுது “நாங்கள் ஒரு ஆப் ஸ்பின்னருக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய பெயர்களை ஆலோசித்தோம். ஆனால் இப்பொழுது 17 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடிந்திருக்கின்ற காரணத்தினால், சாகல் வரை வெளியே செல்ல வேண்டியதாக இருந்தது.

- Advertisement -

வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரை குறைத்தால் மட்டுமே சாகலை உள்ளே கொண்டு வர முடியும். அடுத்த இரண்டு மாதங்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் மிக முக்கிய பணியை செய்ய இருப்பதால், எங்களால் அவர்களை வெளியே வைக்க முடியவில்லை.

வேகப்பந்துவீச்சாளர்களில் சிலர் காயத்தில் இருந்து மீண்டும் வருகிறார்கள். அதனால் நாங்கள் அவர்களுக்கு வாய்ப்பு அளித்து அணிக்குள் கொண்டு வந்து அவர்கள் என்ன மாதிரி இருக்கிறார்கள் எங்களுக்கு எதை தருகிறார்கள் என்று பார்க்க விரும்புகிறோம்.

இப்படிச் சொல்கின்ற காரணத்தினால் யாருக்கும் கதவுகள் மூடப்பட்டு விட்டது என்று கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். நமக்கு சாகல் தேவை என்றாலோ இல்லை அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் தேவை என்றாலோ, நாம் அவர்களை உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்குள் எப்படி அடக்குவது என்று நிச்சயம் யோசிப்போம்!” என்று கூறியிருக்கிறார்!