ஒரே நேரத்தில் 2 இந்திய அணிகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அணிக்கெதிராக விளையாடக்கூடிய நாள் வரப்போகிறது – ஜெய்ஷா உறுதி

0
139

கடந்த ஆண்டு ஜூலை மாதம் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் விராட் கோலி தலைமையிலான ஒரு இந்திய அணி இங்கிலாந்திலும், ஷிகர் தவான் தலைமையிலான ஒரு இந்திய அணி இலங்கையில் விளையாடியது மிகப் புதிதாக இருந்தது. தற்பொழுது அதை குறிப்பிட்டு கூறியுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இனி வரும் நாட்களில் இது போன்று ஒரே நேரத்தில் இரண்டு அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரண்டு வெவ்வேறு அனிகள் வெவ்வேறு நாடுகளில்

பிசிசிஐ நபர்களுடன் நிறைய இது சம்பந்தமாக நாங்கள் பேசியிருக்கிறோம். எங்களது கண்பார்வையில் தயாராக 50 இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்றனர். ஒரே நேரத்தில் இவர்கள் அனைவரும் தயாராக இருப்பதால் இனி வரும் நாட்களில் இரண்டு வெவ்வேறு அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒரு அணி ஒரு நாட்டில் டெஸ்ட் தொடரில் பங்கு பெறும் என்றும் மற்றொரு அணி வேறு ஒரு நாட்டில் ஒரு நாள் அல்லது டி20 தொடரில் பங்கேற்று விளையாடும் என்று விளக்கமளித்துள்ளார். ஐபிஎல் தொடர் வந்ததில் இருந்து நிறைய கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து வருகின்றனர். இது ஆரோக்கியமான விஷயம் என்றும் செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடர் சம்பந்தமாக பேசிய அவர் இனி வரும் நாட்களில் வருடத்திற்கு இரண்டரை மாதம் ஐபிஎல் தொடருக்காக தனியாக ஒதுக்கப்படும். ஐசிசி நிர்வாகிகளுடன் இது சம்பந்தமாக நாங்கள் பேசி வருகிறோம். இரண்டரை மாதம் இதற்கென தனியாக ஒதுக்குவதால் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் எந்தவித தயக்கமுமின்றி (அவர்களது நாட்டுக்காக விளையாடுவதை புறக்கணித்து ஐபிஎல் விளையாட வேண்டும் என்கிற சூழ்நிலை இல்லாமல்) இந்தியாவில் இனி ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள். இது இனிவரும் நாட்களில் நிச்சயம் சாத்தியப்படும் என்றும் ஜெய்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிறு நாடுகளுக்கு எதிராகவும் நாங்கள் விளையாடுவோம்

இந்திய அணி என்றாலே ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து போன்ற பலம் வாய்ந்த நாடுகளுக்கு எதிராக விளையாட வேண்டும் என்கிற அவசியமில்லை. இனி சிறிய நாடுகளுக்கு எதிராகவும் நாங்கள் விளையாடுவோம் அவர்களுக்கு எங்களுடைய ஆதரவை கொடுப்போம்.

இப்படி விளையாடுவதன் மூலம் அவர்களது அணி பலப்படும். அதுதான் ஆரோக்கியமான விஷயம் என்றும் கூறியுள்ளார். இந்த மாத இறுதியில் அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடப் போகிறது இனி இது போன்ற நிறைய தொடர்களில் இந்திய அணி பங்கேற்று விளையாடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.