பந்தின் நிறம் முக்கியமல்ல; மனதின் நம்பிக்கைதான் முக்கியம் – முகமது ஷமி மாஸ் பேச்சு!

0
369
Shami

நடப்பு எட்டாவது டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவிக்கும் பொழுது, அதில் முகமது சமி பெயர் இல்லை ஆனால் அவர் தற்போது அணியில் இருக்கிறார். ஜஸ்ட்பிரித் பும்ரா பெயர் இருந்தது ஆனால் அவர் தற்போது அணியில் இல்லை!

இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் பொறுப்பேற்றுக் கொண்ட பின், தற்பொழுது நடந்து வரும் டி20 உலக கோப்பையை மனதில் வைத்து தங்களது செயல்பாட்டை அமைத்தார்கள்.

- Advertisement -

இவர்களது வேகப்பந்து வீச்சு குழுவில் முகமது சமி இல்லை. புவனேஸ்வர் குமார், ஜஸ்ட்பிரித் பும்ரா, அர்ஸ்தீப் சிங், ஹர்சல் படேல், ஆவேஸ் கான் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர்தான் இருந்தனர்.

இதில் உம்ரான் மாலிக்குக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆவேஸ் கான் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படவில்லை. இந்த நிலையில் பும்ரா காயத்தால் வெளியேற முகமது சமி நேரடியாக இந்த உலகக் கோப்பை தொடருக்கு அழைக்கப்பட்டார். அணிக்குள் வந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் கடைசி ஓவர் கலக்கலாக வீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அடுத்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணியுடன் அவரது பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. தென் ஆப்பிரிக்க அணியுடனும் அவரது பந்துவீச்சு மிக சிக்கனமாக இருந்தது.

தான் தயாராகி வந்த விதம் குறித்து தற்போது பேசி உள்ள முகமது சமி “தற்போது நான் உள்ள நிலை, இது அனைத்தும் நாம் முன்கூட்டியே தயாராவது பொறுத்து உள்ளது. அணி நிர்வாகம் எப்பொழுதுமே நம்மை தயாராகத்தான் இருக்க சொல்லும். நாம் நம் அணிக்கு தேவைப்படும்போது உடனே அழைக்கப்படுவோம். நீங்கள் எனது வீடியோவை பார்த்து இருந்தால் தெரியும். நான் பயிற்சியில் இருந்து ஒருபோதும் விலகவே கிடையாது ” என்று கூறியுள்ளார்…

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஒரு கிரிக்கெட் வடிவத்தில் இருந்து மற்றொரு கிரிக்கெட் வடிவத்திற்கு, சிவப்புப் பந்தில் இருந்து வெள்ளைப் பந்துக்கு மாறுவது எப்போதுமே எளிதானது கிடையாது. இதுவெல்லாம் அணியுடன் நீங்கள் எவ்வளவு இணைந்திருக்கிறீர்கள், அவர்களுடன் நீங்கள் எவ்வளவு பிணைந்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. நான் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இப்பொழுதுதான் டி20 போட்டியில் விளையாடுகிறேன். பந்தின் நிறத்தை விட நமது முயற்சியும் நம்பிக்கையும் முக்கியம் ” என்று பேசியுள்ளார்.