ஐபிஎல் 2025

சிஎஸ்கே உடன் தோல்வி.. பும்ரா எப்போது வருகிறார்? – மும்பை பவுலிங் கோச் கவலையான செய்தி

நடப்பு ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா எப்பொழுது இணைவார் என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மகாம்ப்ரே புதிய தகவல்களை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா காயமடைந்தார். இதன் காரணமாக அவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் இடம் பெறவில்லை. தொடர்ந்து அவர் என்சிஏ கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார். இதனால் அவர் எப்பொழுதும் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவார் என்று யாருக்கும் தெரியவில்லை.

அஜித் அகர்கர் வெளியிட்ட தகவல்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பும்ராவுக்கு 5 வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறி இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த அடிப்படையில் அவரை சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியிலும் தேர்வு செய்து இருந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் உடல் தகுதி பெறாததால் அவர் அணியில் நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் வாரத்தில் அணியுடன் இணைய மாட்டார் ; மூன்று போட்டிகளில் முதலில் விளையாட மாட்டார் என்று பல்வேறு செய்திகள் கூறப்பட்டது. இதில் எது உண்மை என்று ஊர்ஜிதம் ஆகவில்லை. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் இந்திய ரசிகர்களுக்கு கவலை அளிக்கும்படி ஒரு தகவலை கூறி இருக்கிறார்.

- Advertisement -

பும்ரா எப்போது வருவார்?

இது குறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மகாம்ப்ரே கூறும் பொழுது “பும்ரா தற்போது நலமுடன் இருக்கிறார் அவர் கூடிய விரைவில் அணியில் இணைந்து விடுவார் என்பதான செய்திகள் எங்களுக்கு கிடைக்கும் என்று நான் நினைத்திருந்தேன். தற்போது அவர் இவ்வளவு காலத்திற்குள் கிடைப்பார் என்கின்ற நிலையில் இருந்து நான் வெளியில் வந்து விட்டேன். இதை நான் மொத்தமாக என்சிஏவிடம் விட்டு விடுகிறேன்.

இதையும் படிங்க : தோனிக்கு ஸ்ட்ரைக் தராதது ஏன்?.. சிஎஸ்கே ரசிகர்களின் கேள்விக்கு ரச்சின் ரவீந்தரா பதில்

“ஆனால் நிச்சயமாக அவர் திரும்பி வருவதை நான் விரும்புவேன். அவர் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவரை அணியில் சேர்க்க ஆவலாக காத்திருக்கிறேன். அவருடைய முன்னேற்றத்தில் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் ஆனால் அது எப்படி நடக்கிறது என்று பார்க்க வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by