ஐபிஎல் மினி ஏலத்திற்கு பின் சிஎஸ்கேவின் வெயிட்டான பிளேயிங் லெவன்!

0
797
ms dhoni ben stokes

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்திற்கு பின் எல்லா அணியினருக்குமான வீரர்களை தேர்வு செய்தனர் . ஒவ்வொரு அணியினரும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிடல்களின் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இனி எந்தெந்த வீரர்களை எந்தெந்த காம்பினேஷன்களில் விளையாட வைப்பார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் கிரிக்கெட் விமர்சகர்களிடமும் அதிகரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் இல் கோப்பையை வென்றாலும் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் இல் சிஎஸ்கே அணியானது முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் நடக்க இருக்கின்ற ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சிஎஸ்கே அணி. இதனை மனதில் வைத்துக் கொண்டுதான் ஐபிஎல் ஏலத்தின் போது அவர்கள் அணி காம்பினேஷனுக்கு ஏற்ற வீரர்களை தேர்வு செய்துள்ளனர் .

- Advertisement -

தற்போது சிஎஸ்கே அணியானது அனுபவம் மற்றும் இளம் வீரர்களின் கலவையாக உள்ளது . தற்போது பென் ஸ்டோக்ஸ்,கைல் ஜெமிசன் போன்ற வீரர்களின் வருகை அணியை மேலும் வலுவாக்கியுள்ளது . இதற்கு முன் தக்க வைக்கப்பட்ட வீரர்களையும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்களையும் வைத்து இதுதான் சிஎஸ்கே வின் சிறந்த ஆடும் லெவனாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே கருத்தை ஆமோதிக்கும் விதமாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அவர்களும் தெரிவித்துள்ளார்.

தற்போது இருக்கின்ற சிஎஸ்கே வீரர்களின் அடிப்படையில் துவக்க வீரர்களாக ருத்ராஜ் கேகுவார்டு மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் விளையாடுவார்கள். ஒன் டவுன் பேட்ஸ்மனாக மொயின் அலியும் அவரைத் தொடர்ந்து நான்காவதாக அம்பட்டி ராயுடுவும் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் சிவம் துபேவும் ரவீந்திர ஜடேஜாவும் விளையாடுவார்கள் . இவர்களைத் தொடர்ந்து ஏழாவது இடத்தில் கேப்டன் எம் எஸ் தோனியும் அவரைத் தொடர்ந்து எட்டாவது இடத்தில் பிரிட்டோரியஸ்ம் ஒன்பதாவது ஆட்டக்காரராக தீபக் சகாரும் பத்தாவது இடத்தில் முகேஷ் குமாரும் மற்றும் பதினொன்றாவது வீரராக இலங்கை அணியின் மைஸ்டரி ஸ்பின்னர் மகேஷ் தீக்சனாவும் விளையாடலாம்.

இந்த அணிதான் சிறந்த பிளேயிங் லெவனாக சிஎஸ்கேவுக்கு இருக்கும் . ஏனென்றால் இந்த அணியில் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் சரிசமமாக உள்ளனர். மேலும் இந்த அணியில் பென் ஸ்டோக்ஸ்,மொயின் அலி சிவம் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற ஆல் ரவுண்டர்கள் இருப்பதால் அணியின் பேலன்ஸ் நன்றாக இருக்கின்றது. மேலும் இந்த அணியானது ஒரு டி20 வண்டி அணிக்கு தேவையான எல்லா அடிப்படை விஷயங்களையும் கவர் செய்கின்றது .

- Advertisement -

நேற்று நடந்த ஐபிஎல் இன் மினி ஏலத்திற்கு பின் பேசிய சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அவர்கள் ” எம் எஸ் தோனி அணி நிர்வாகத்திடம் நிச்சயமாக நாம் பென்ஸ்டோக்சை வாங்க முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அதுபோலவே பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணிக்கு கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது . மேலும் எம் எஸ் தோனியும் எங்களிடம் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டார் என்று தெரிவித்தார்.

ஐபிஎல் ஏலம் பற்றி தொடர்ந்து பேசியவர் நியூசிலாந்து அணியின் வீரர் கைல் ஜெமிசன் காயமடைந்து இருந்ததால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை . ஆனால் அவர் காயப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த செய்தி ஸ்டீபன் பிளெமிங் மூலமாக நாங்கள் அறிந்து கொண்டோம் இதனால் அவரை ஏலத்தில் எடுத்தோம் . மொத்தத்தில் இந்த ஏலமானது சிஎஸ்கே அணிக்கு மிகச் சிறப்பாக அமைந்தது என்று கூறி முடித்தார்