இந்தியாவுக்கு எதிராக பக்கா ஸ்கெட்சுடன் களம் காணும் ஆஸ்திரேலிய அணி !

0
279

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  தொடருக்கான இறுதிப் போட்டி வருகின்ற ஜூன் மாதம்  இங்கிலாந்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இதற்கான டெஸ்ட் தொடர்கள்  பெரும்பாலானவை முடிந்து விட்ட நிலையில்  இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்  நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்  மற்றும் தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்  ஆகியவை மீதம் இருக்கின்றன.

இதில் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி  பெரும் நிலையில் இருக்கிறது . அதற்கு அடுத்து இருக்கும் இந்திய அணி  ஆஸ்திரேலிய தொடரின் வெற்றி தோல்விகளை பொருத்து  இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பை பெறுமா என்பது தெரியவரும் . மேலும் தென்னாப்பிரிக்கா மற்றும்  இலங்கை அணிகளுக்கும் இதே நிலைதான் . அவர்களது தொடர்களில் வரும் வெற்றியை பொருத்த தான்  அவர்களின் இறுதி வாய்ப்பு இருக்கிறது .

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியானது  வருகின்ற பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு  சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் தொடர்கள் மற்றும்  மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர்களில் ஆடை இருக்கிறது . ஆஸ்திரேலியா அணி  ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு  டெஸ்ட் தொடருக்காக இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது . இந்திய அணியானது கடந்த இரண்டு முறை  ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து  டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி  சாதனை புரிந்தது  குறிப்பிடத்தக்கது .

2017 ஆம் ஆண்டின் டெஸ்ட் தொடரையும் 2-1  என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி இழந்தது குறிப்பிடத்தக்கது . இதனால் இந்த முறை எப்படி  எனும் தொடரை  கைப்பற்றியே தீர வேண்டும் என்ற  உத்தியோகத்துடன் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது . இதற்காக 18 வீரர்களை கொண்ட  அணியை  நேற்று அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

ஆறு வேகப்பந்துவீச்சாளர்கள்  நான்கு முதல் தர ஸ்பின்னர்கள்  என  அட்டகாசமான ஸ்குவாடை அறிவித்து  இந்தியாவை சமாளிக்க தயாராக இருக்கிறது  ஆஸ்திரேலியா அணி. சமீப காலத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மன்களுக்கு இருக்கும்  சுழற் பந்துவீச்சை ஆடுவதற்கான பலகீனத்தை  புரிந்து கொண்டு  அறிமுக ஸ்பின்னரான  டாட் மர்பியை அணியில் சேர்த்துள்ளது ஆஸ்திரேலியா . இவரைத் தவிர  அனுபவ சுழற் பந்துவீச்சாளர் நேத்தன் லயான், மைக்கேல் ஸ்வீட்சன், எஸ்டன்  ஏகார்  ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

வேகப்பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க்  பேட் கம்மின்ஸ்.ஸ்காட் போலான்ட், லேன்ஸ் மோரிஸ்.ஜோஸ் ஹேசல்வுட் மற்றும் பேட்டிங் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் .

டேட்டிங்கை பொறுத்த வரை  டேவிட் வார்னர் உஸ்மான் கவஜா, ஸ்டீவன் ஸ்மித்,மார்னஸ் லபுசன்,டிராவிஸ் ஹெட், மேட் ரென்ஷா மற்றும் பீட்டர் ஹண்ட்ஸ்கொம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் முன்னனி வேகுபந்துவீச்சாளர் மிக்சல் ஸ்டார்க் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் அவர் அணியில் இருந்து விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.