“அவர் அதனால் தான் உலகின் நம்பர் ஒன் வீரராக இருக்கிறார்” – சூரிய குமாரை புகழ்ந்து தள்ளிய ராகுல் டிராவிட்!

0
8643
Rahul Dravid

எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

இந்த ஆட்டத்தில் மிக அபாரமாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அவரது பாணியில் நவீன கிரிக்கெட் ஷாட்கள் மூலம் அதிரடியாக 25 பந்துகளில் 61 ரன்களை ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் கொண்டு வந்து இந்திய அணியை நல்ல இலக்கை எட்ட வைத்தார்!

- Advertisement -

அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் ஐந்து ஆட்டங்களில் மொத்தம் மூன்று அரை சதங்களுடன் 73 ரன் சராசரியில் 190.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 219 ரன்களை குவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

இன்று அவர் விளையாடி உள்ள விதம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. சூரியகுமார் யாதவின் ஆட்டம் பற்றி பேசி உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “இது நம்ப முடியாத ஒரு ஆட்டம். இதனால்தான் அவர் டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். ஏனெனில் அவர் விளையாடும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அவர் மிகச் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் தொடர்ந்து விளையாடுகிறார். அதனால் அவர் விளையாடும் விதம் மிகவும் அருமையாக இருக்கிறது. அவர் தனது செயல்முறைகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார், தனது ஆட்ட வியூகம் குறித்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறார், அவர் தனது தந்திரோபாயத்தில் தெளிவாக இருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய ராகுல் டிராவிட் ” அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார் என்று நன்றாகவே தெரிகிறது. சூரியகுமார் யாதவ் வலைப்பயிற்சியில் எப்படியான உழைப்பை போட்டு இருக்கிறார் என்று யோசிக்கிறேன். மேலும் அவரது உடல் தகுதி, மற்றும் ஆட்ட தகுதிக்காக நிறைய உழைத்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பாக சூரியகுமார் யாதவ் தனது உடல் தகுதியை அதிகப்படுத்துவதற்காக உழைக்க ஆரம்பித்துள்ளார். அவரது கடின உழைப்பிற்கான பலனைத் தான் தற்போது அனுபவித்து வருகிறார் என்று நினைக்கிறேன். இது இன்னும் தொடரும்” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசியவர் ” அவர் எங்களுக்கு மிகவும் தனித்துவமான வீரர். அவர் இந்த மாதிரி ஃபார்மில் இருந்து பேட்டிங் செய்வதை பார்ப்பதே மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் ஏதாவது மேஜிக் செய்கிறார் சந்தேகத்துக்கு இடமின்றி. சர்வதேச தர உயரத்தில் வீரர்கள் எல்லாருமே நல்ல சுய ஊக்கம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர்களுக்கு நாம் எதையும் தனியாகச் செய்ய வேண்டியது இல்லை ” என்று முடித்துள்ளார்!