“நான் அவுட் ஆனதும் சொன்னதே வேற.. ரிங்கு சிங்தான் என்னையும் அமைதிபடுத்தினார்!” – கேப்டன் சூரியகுமார் பேச்சு!

0
38990
Surya

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்து வீசுவது என தீர்மானித்தது. விசாகப்பட்டினம் மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான மைதானம்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஜோஸ் இங்கிலீஷ் அதிரடியாக 50 பந்துகளில் 110 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. கடைசி கட்டத்தில் முகேஷ் குமார் இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு இஷான் கிஷான் 58 ரன்கள் எடுக்க, சூரியகுமார் யாதவ் 42 பந்தில் 80 ரன்கள் எடுத்து, வெற்றி எளிதாக இருந்த பொழுது ஆட்டம் இழந்தார். ஆனால் ஆட்டம் கடைசி ஓவரின் கடைசி பந்து வரை சென்றுதான் முடிந்தது. ரிங்கு சிங் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்து அசத்தினார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி.அவர்கள் வெளிப்படுத்திய ஆற்றலால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் நாங்களும் அழுத்தத்திற்கு உள்ளானோம். ஆனால் அனைவரும் செயல்பட்ட விதம் மிகச் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

கேப்டனாக இருந்து அணியை வழி நடத்துவது மிகவும் பெருமையான தருணம். நீங்கள் விளையாடும் ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள் என்று நினைப்பீர்கள். ஆனால் இங்கு இந்தியாவுக்கு கேப்டனாகவும் இருப்பது சிறப்பானது.

இங்கு ஆட்டத்தில் இரண்டாவது பகுதியில் கொஞ்சம் பனி இருக்கும் என்று நினைத்தேன். மைதானம் பெரிதில்லை என்பதால் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும் என்று எனக்கு தெரியும். அவர்கள் 230 ரன்களுக்கு மேல் அடிக்கலாம் என்று முயற்சி செய்தார்கள். ஆனால் இறுதியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்தினார்கள்.

ஐபிஎல் தொடரில் நாங்கள் இதுபோன்ற சூழ்நிலையில் பலமுறை இருந்திருக்கிறோம். நான் விளையாட்டை அனுபவித்து எல்லோரையும் விளையாடச் சொன்னேன். மேலும் ட்ரெஸ்ஸிங் ரூமிலேயே நான் கேப்டன்சி சுமைகளை எல்லாம் விட்டு விட்டு வந்து விட்டேன்.

நான் ஆட்டம் இழந்து வெளியேறிய பொழுது ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்லாமல் சீக்கிரம் முடிக்கும்படி கூறினேன். ஆனால் எங்கள் வீரர்கள் பதற்றத்தில் வைத்திருந்ததும் நன்றாகத்தான் இருந்தது.

ரிங்கு சிங் விளையாடுவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மிகவும் அமைதியாக காணப்படுகிறார். அவருடைய அமைதியால் என்னையும் ஆசுவாசப்படுத்தினார். மேலும் 16 ஓவர்களுக்கு பிறகு எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தியது மிகவும் சிறப்பு!” என்று கூறியிருக்கிறார்!