ரோகித்தின் முதல் அயல்நாட்டு சதம் – ஏழு ஆண்டுகளுக்கு முன் தோனி வெளியிட்ட ட்வீட் வைரல்

0
494
MS Dhoni and Rohit Sharma

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் 4-வது டெஸ்ட் தற்போது ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய வீரர்கள் சரியாக விளையாடாததால் 195 ரன்களுக்கு மொத்த இந்திய அணியும் ஆல் அவுட் ஆனது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் அதற்கு ஈடுகொடுக்கும் வண்ணமாக இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் இரண்டாவது இன்னிங்சில் சதம் கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று பல முன்னணி வீரர்கள் விமர்சித்த நிலையில் தற்போது அதையெல்லாம் கடந்து இங்கிலாந்து மைதானத்தில் சதம் கடந்துள்ளார் ரோகித். இதற்கு முன்பு இவர் அடித்த எல்லா சுகங்களும் இந்திய மைதானங்களில் அடிக்கப் பட்டவை தான். இதனால் ரோகித் இந்திய மைதானங்களில் மட்டுமே சிறப்பாக ஆடுவார் என்ற ஒரு பேச்சும் இருந்தது. அதற்கும் தற்போது இந்த சதத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் ரோகித்.

ஏற்கனவே இந்த தொடர் முழுவதும் சிறப்பாகவே ஆடி வந்தாலும் சதம் மட்டும் அடிக்க முடியாமலே இருந்தது ரோஹித்துக்கு. கடந்து லட்ஸ்ட் ஸ்டில் கூட ஒருமுறை 80 ரன்களுக்கு மேல் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இந்த முறை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிடாமல் மொயின் அலி பந்துவீச்சில் இறங்கி வந்து சிக்சர் அடித்து சதம் நிறைவுசெய்தார் ரோஹித்.

ரோஹித்தின் முதல் ஓவர்சீஸ் சதத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் போது சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தோனி வெளியிட்ட ட்வீட் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் ரோகித் சிறப்பாக பேட்டிங் செய்து உள்ளார் என்றும் அருமையான ஆட்டக்காரர் என்றும் ரோஹித்தை தோனி புகழ்ந்துள்ளார். ரோகித்தின் அருமையான ஆட்டத்தை கண்டுகளியுங்கள் என்றும் மகிழ்ச்சியாக தோனி தற்போது வெளியிட்டுள்ளார்.

இது ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தனது இரண்டாவது இரட்டை சதத்தை அடித்த பிறகு தோனி வெளியிட்ட ட்வீட் ஆகும். புரோகித் ஒருநாள் போட்டிகளில் சற்று மந்தமாக ஆடி வந்த நிலையில் அவரை துவக்க வீரர் ஆக்கி சிறப்பாக ஆட வைத்தவர் தோனி. அதனால் தோனியின் இந்த ட்விட்டை தற்போது அவர் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.