இன்னும் சில ஆண்டுகளில் வருடத்திற்கு 2 ஐபிஎல் தொடர்கள் நடைபெற தான் போகிறது – அடித்து கூறும் ஆகாஷ் சோப்ரா

0
38

2008 மற்றும் 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் விளையாடி பின்னர் 2011ம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் பங்கெடுத்துக் கொண்டவர் தான் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா.அவர் தற்போது ஐபிஎல் தொடர் வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.வருடத்திற்கு இரண்டு முறை ஐபிஎல் தொடர் நடைபெற போகின்றது2008 முதல் தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் வரையில் ஒவ்வொரு வருடமும் ஒரு ஐபிஎல் தொடர் தான் நடந்து முடிந்திருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 8 அணிகள் அல்லாமல் 10 அணிகள் பங்கேற்று மிகப்பெரிய ஐபிஎல் தொடராக நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.இனி ஒவ்வொரு வருடமும் 10 அணிகள் பங்கேற்று விளையாட போவதால் ஒவ்வொரு ஆண்டும் இதே போல அதிக போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடராக தான் இனி நடைபெறப் போகின்றது.இந்நிலையில் தற்போது ஆகாஷ் சோப்ரா இனி வருடத்திற்கு இரண்டு முறை ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.”இது நடக்குமா அல்லது நடக்காதா என்று அதிகாரப் பூர்வமாக கூற முடியாது. இருப்பினும் என் உள்மனதில் ஒரு விஷயம் தோன்றுகிறது அது நிச்சயமாக 100% நடைபெறும் என்றும் எனக்கு தோன்றுகிறது.மிகப்பெரிய ஐபிஎல் தொடராக அதாவது தற்பொழுது போல 90 போட்டிகளுக்கு மேல் கொண்ட ஒரு ஐபிஎல் தொடர் ஆண்டின் முதல் பாதியிலும், பின்னர் ஒரு மாதத்திற்குள் நடக்கும் வகையில் ஒரு ஐபிஎல் தொடர் ஆண்டின் இரண்டாம் பாதியிலும் நடைபெறும் என்று ஆகாஷ் சோப்ரா அடித்துக் கூறுகிறார். ஒரு மாதத்திற்குள் நடக்கும் ஐபிஎல் தொடர் மிகக்குறுகிய போட்டிகளைக் கொண்ட ஐபிஎல் தொடராக நடைபெறும் என்றும் கூறியிருக்கிறார்.ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்கள் அதுபோக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் அதைத்தொடர்ந்து டி20 தொடர் என போட்டிகள் நடைபெறும் நிலையில் ஆண்டிற்கு இரண்டு முறை ஐபிஎல் தொடர் நடைபெறுவது சந்தேகம்தான். இருப்பினும் ஆகாஷ் சோப்ரா கூறுவதுபோல் ஐபிஎல் தொடர் வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.