அந்தப் பையன் சரியில்லை ; – சல்மான் பட் பரபரப்பு குற்றச்சாட்டு!

0
4164
Salman Butt

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது!

இதுவரை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் இந்தப் போட்டி மிகவும் முக்கியம் வாய்ந்த போட்டியாகவும் இருந்தது அதேவேளையில் மிகப்பெரிய திருப்பங்களை உள்ளடக்கியதாகவும் மிகுந்த பரபரப்பு கொண்டதாகவும் ரசிகர்களை மிகப்பெரிய அழுத்தத்தில் வைத்த போட்டியாகவும் இந்த போட்டி அமைந்திருந்தது.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி முதன் முறையாக ஒரு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் முதல் தோல்வியை தழுவியது. அந்தத் தோல்வியை இந்திய அணியை அந்த தொடரை விட்டு முதல் சுற்றோடு வெளியே கூட்டி வந்து விட்டது.

இந்த காரணத்தால் இந்த வருடம் நடத்தப்படும் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் இருந்தது. இந்த முக்கியத்துவத்தை தாண்டி நடைபெற்ற போட்டி இதுவரை நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை விட உச்சபட்ச திருப்பங்கள் நிறைந்த பரபரப்பு நிறைந்த போட்டியாக நடந்தது.

இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஒரு திருப்பமாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறினார். அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி காயத்திலிருந்து குணமடைந்தது டி20 உலகக் கோப்பை தொடருக்கு வந்தார். இவர் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.

- Advertisement -

இவரது செயல்பாடு குறித்து விமர்சனம் செய்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் இடதுகை துவக்க ஆட்டக்காரர் சல்மான் பட் கூறும்பொழுது ” இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஷாகின் அப்ரிடி தனது அனைத்து முயற்சிகளையும் செய்ய விரும்பிய ஒரு போட்டி இருந்திருந்தால் அது இந்திய அணியுடன் மோதிய போட்டியாகத்தான் இருக்கும். இப்படி ஒரு போட்டியை விளையாடும் பொழுது ஒரு வீரர் பற்றிய சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் வெளியே போய்விடுகிறது. இந்த போட்டியில் ஷாகின் செயல்பாட்டை பார்க்கும் பொழுது அவருக்கு ஏதோ தடை இருப்பது போல தெரிகிறது. அவர் 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லை என்றுதான் அர்த்தம். அவர் வரும் ஆட்டங்களில் வேகத்தை குறைத்தாலோ அல்லது ஆடாமல் வெளியேறினாலோ பாகிஸ்தான் அணி நிர்வாகமும் மருத்துவர் குழுவும் இதற்கு பதில் அளித்தே ஆகவேண்டும்” என்று தனது குற்றச்சாட்டை எச்சரிக்கை விடுக்கும் விதமாகக் கூறியிருக்கிறார்!