அந்தப் பையனுக்கு சுயநலம் இல்ல அவனை யாருக்காகவும் விட்றாதிங்க – தினேஷ் கார்த்திக் அழுத்தமான வேண்டுகோள்!

0
5106
DK

நியூசிலாந்து அணி உடனான சொந்த மண்ணில் விளையாடும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி மற்றும் தொடரை நிர்ணயிக்கும் போட்டி நேற்று நடைபெற்றது!

இந்தப் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் மிக பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்கள் குவித்து, சர்வதேச டி20 போட்டியில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். அடுத்து இந்திய அணி 234 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த போட்டியில் இஷான் கிஷான் உடனே வெளியேற அடுத்து வந்த ராகுல் திரிபாதி சரவெடியாய் வெடித்த ஆட்டத்திற்கு தன் அதிரடி பேட்டிங் மூலம் திரியை பற்ற வைத்தார். 22 பந்துகளை சந்தித்த அவர் 44 ரன்கள் விளாசி இந்திய அணியின் ரன் வேகம் மட்டுப்படாமல் பார்த்துக் கொண்டார்.

இதேபோல் இலங்கை அணி உடன் சமீபத்தில் நடந்த டி20 தொடரில், தொடரை நிர்ணயிக்கும் கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் பேட்டிங்கில் ஒரு தாக்கத்தை உருவாக்கி இருந்தார். தற்பொழுதும் அவரது சுயநலமில்லாத பேட்டிங் அணுகுமுறையால் செய்திருக்கிறார்.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் ” ராகுல் திரிபாதி இந்திய டி20 அணியில் மூன்றாவது இடத்திற்கு எப்பொழுதும் தகுதியானவர். விராட் கோலி விளையாடாவிட்டால் அவருக்குத்தான் அந்த இடத்திற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். அவர் மிகச்சிறந்த மற்றும் தன்னலமற்ற முறையில் இயங்குகிறார். இந்தியா ஐசிசி போட்டிகளில் கலந்து கொள்ள இப்படியான வீரர்கள் தேவை!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ராகுல் திரிபாதிக்கு பதிலாக பெரிய பெயர்கள் பரிசீலனையில் வரும். ஆனால் நாம் அவர் அடித்த 30 மற்றும் 40 ரன்களை எடுத்து பார்க்க வேண்டும். அவர் ஒவ்வொரு முறை உள்ளே வரும் பொழுதும் மிகவும் சிக்கலான நேரத்தில் தைரியமான முறையில் இந்த ரண்களை அடித்துள்ளார். அவரது கேரியர் லைனில் இருந்தாலும், அவர் தன் விக்கட்டை பற்றி கவலைப்படாமல் அணிக்காக சுயநலம் இல்லாமல் விளையாடினார்!” என்று குறிப்பிட்டுள்ளார்!