யாரும் எட்ட முடியாத புது சாதனையுடன் களமிறங்க இருக்கும் தல தோனி!

0
231
Dhoni

2008 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது ஐபிஎல் தொடரின் பதினாறாவது சீசன் ஆரம்பித்து இரண்டாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது!

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கேப்டனாக இருக்கக்கூடிய பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்குத்தான் இருக்கிறது. நடுவில் இரண்டு முறை அவர் கேப்டனாக இல்லாத பொழுதும் மீண்டும் கேப்டனாக வந்திருக்கிறார்!

- Advertisement -

ஐபிஎல் தொடரில் அவரே அதிக போட்டிகளில் கேப்டனாக 213 போட்டிகளில் இருந்து சாதனை படைத்திருக்கிறார். 146 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும், 140 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து விராட் கோலி மூன்றாவது இடத்திலும், 129 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து கௌதம் கம்பீர் நான்காவது இடத்திலும் இருக்கிறார்கள்.

ஐபிஎல் கேப்டன் பொறுப்பில் யாரும் நெருங்க முடியாத சாதனையை செய்திருக்கும் மகேந்திர சிங் தோனி, தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக புதிய சாதனை ஒன்றைப் படைக்க இருக்கிறார். என்ன சாதனை என்றால், மகேந்திர சிங் தோனி இன்று சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கேப்டனாக விளையாடும் பொழுது, அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையைப் படைப்பார்.

ஒரு ஐபிஎல் அணிக்கு 200 போட்டிகளுக்கு கேப்டன் என்பது யாராலும் யோசித்துப் பார்க்க முடியாத விஷயம். இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கக்கூடிய ரோஹித் சர்மா மட்டுமே தற்பொழுது கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மும்பை அணிக்கு கேப்டனாக இன்னும் நான்கு சீசன்கள் பணியாற்றினால்தான் தோனியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

- Advertisement -