சி.எஸ்.கே வலைப்பயிற்சி தளத்தில் ஷர்துல் தாகூர் கோபப்பட்டார் – கோபத்திற்கு பின்னால் இருக்கும் காரணத்தை விளக்கிய இம்ரான் தாஹிர்

0
449
Imran Tahir about Shardul Thakur

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் வீரராக அவதாரம் எடுத்த தாகூர், தற்பொழுது இந்திய அணியிலும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா இல்லாத குறையை அவர் போக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு அரைசதம் அடித்தும் அசத்தினார்.

பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடி மொத்தமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், 2 அரை சதம் குவித்தும் அசத்தினார். மிகச் சிறப்பான பார்மில் இருக்கும் அவர் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியிலும் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி பேட்டிங்கில் அதிரடியாக 28 ரன்கள் குவித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாமல் இந்திய அணிக்காக கடந்த சில டி20 போட்டிகளிலும் முக்கிய நேரங்களில் விக்கெட் கைப்பற்றுவது, அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தியது என்று கடந்த ஆண்டு முதல் மிக சிறப்பாகவே விளையாடி வருகிறார்.

அவரது விளையாட்டிற்கு பின்னால் இருக்கும் கடின உழைப்பு

ஷர்துல் தாகூர் இந்த அளவுக்கு பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அசத்துவதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய காரணம் உள்ளது. அவரது கடின உழைப்பு தான் அதற்கு காரணம் என்று தென் ஆப்பிரிக்க அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான இம்ரான் தாஹிர் தற்பொழுது கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் அவருடன் விளையாடியபோது, அவர் தனது பேட்டிங்கில் நிறைய நேரம் செலவிடுவார். தன்னுடைய பேட்டிங் திறமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மிக நீண்ட நேரம் அவர் பயிற்சி எடுத்துக் கொள்வார். ஒரு சில சமயம் அவருக்கு போதுமான பயிற்சி நேரம் கிடைக்காமல் போனது. அப்பொழுது தனக்கு போதுமான பயிற்சி நேரம் கிடைக்காத காரணத்தினால் அவர் அதிக அளவில் கோபப்பட்டார்.

கடின உழைப்பின் காரணமாகவே இன்று அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக அனைத்து போட்டியிலும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். நிச்சயமாக இந்திய அணிக்கு இனிவரும் நாட்களிலும் அவர் சிறப்பாகவே விளையாடுவார் என்று இந்திய ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் அவருக்கு புகழாரம் சூட்டிக் கொண்டு வருகின்றனர்.