அறிமுக போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்தை கதிகலங்க செய்த பாகிஸ்தான் இளம் வீரர்!

0
2650

அறிமுகப் போட்டியில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார் அப்ரார் அகமது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியை போலவே இப்போதும் அதிரடியாக துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலி 19 ரன்களுக்கு அவுட்டாகினர். இரண்டாவது விக்கெட் இருக்கு ஜோடி சேர்ந்த ஆழிப்போம் சேர்ந்து அதிரடியாக விளையாடி ஸ்கோரை மல மல என உயர்த்தினார்.

49 பந்துகளில் 9 பவுண்டரி ஒரு சிக்ஸ் உட்பட 63 ரன்கள் அடித்திருந்த பென் டக்கட் அப்ரார் அகமது பந்தில் அவுட்டானார். இவருடன் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்துவந்த ஆலி போப் 61 பந்துகளில் 60 ரன்கள் அடித்து வெளியேறினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது.

முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக இருந்த ஹரி ப்ரோ 9 ரன்களுக்கும் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 8 ரன்களுக்கும் அவுட் ஆகினர். இவர்களது விக்கட்டையும் அறிமுக வீரர் அப்ரார் அகமது கைப்பற்றினார்.

- Advertisement -

உணவு இடைவேளையில், இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. களத்தில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 14 ரன்களுடனும், வில் ஜாக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது, மிகச் சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மற்ற பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவதற்கு திணறி வந்தபோது இவர் ஐந்து விக்கெட்டுகளையும் அறிமுக போட்டியில் கைப்பற்றியது பலரையும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளது. இதனால் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

முதல் போட்டியில் இதே மாதிரியான அதிரடியான ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியதால், முதல் போட்டியில் ஹிமாலய ஸ்கோரை எட்டியது. இப்போது அது தடுக்கப்பட்டிருப்பதால் பாகிஸ்தான் அணி டிரைவர் சீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.