“நான் தீப்தி சர்மா இல்ல ஆனாலும் விடமாட்டேன்”- பட்லரை எச்சரித்த ஸ்டார்க்; வீடியோ இணைப்பு!

0
4764
Aus vs Eng

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை உலகக் கோப்பைக்கு முன்பாக இன்று விளையாடி முடித்தது.

இந்த தொடரின் முதல் போட்டியில் கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேலஸ் இருவரது அதிரடி அரைசதங்களாலும் மற்றும் மார்க் வுட்டின் சிறப்பான வேகப்பந்துவீச்சாலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இதற்கு அடுத்த இரண்டாவது ஆட்டத்தில் டேவிட் மலான் மற்றும் மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், சாம் கரன் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இன்று 3வது போட்டி நடந்தது. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் 12 ஓவர்கள் மட்டுமே இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து, அதில் ஜாஸ் பட்லர் அரை சதம் அடித்தார். இதற்கடுத்து ஆஸ்திரேலிய அணி விளையாடும் பொழுது மழை குறுக்கிட போட்டி அத்தோடு முடிவில்லாமல் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பந்து வீசுகையில், பந்துவீச்சாளர் முனையில் நின்றிருந்த இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கிரீசை விட்டு வெளியே கொஞ்சம் செல்வதுபோல் தெரிய, பந்துவீசி முடித்ததும் மிட்செல் ஸ்டார்க் அதைக் கள நடுவரிடம் உடனே புகார் தெரிவித்தார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இது ஒரு சுவாரசிய விஷயம் என்னவென்றால் ; இதே ஜாஸ் பட்லர் இப்படியான ரன் அவுட்டை நான் ஆதரிக்க மாட்டேன் என்றதும், அதேபோல் ஆஸ்திரேலிய அணியுடனான முதல் போட்டியின்போது மார்க் வுட் கேட்ச் பிடிக்க வர, அதை ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் தடுக்க, அதற்கு ஜாஸ் பட்லர் அம்பயர் இடம் அவுட் கேட்காமல், கேம் ஸ்பிரிட்டை காப்பாற்றுகிறேன் என்று விட்டார். இதேபோல் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் அஸ்வின் இடம் ஜாஸ் பட்லர் இப்படி ரன் அவுட் ஆகியிருக்கிறார். இங்கிலாந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணி தொடர்ந்து இப்படியான ரன் அவுட்டை எதிர்த்தே வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா இப்படி ஒரு ரன் அவுட்டை செய்து அது பெரிய சர்ச்சை ஆனது நினைவிருக்கலாம்.

மிட்செல் ஸ்டார்க் பந்து வீசி முடித்துவிட்டு ஜோஸ் பட்லரை பார்த்து வேடிக்கையாக “நான் இந்தியாவின் தீப்தி சர்மா இல்லை . ஆனால் நானும் ரன்அவுட் செய்வேன்” என்றார். அதற்கு ஜாஸ் பட்லர் ” நீங்கள் தாராளமாக செய்யலாம். ஆனால் நான் கிரீசை தாண்டவில்லை” என்றார்.