உங்க நிலைமை இப்படித்தான் இருக்கு! இனியாவது விழித்துக் கொள்ளுங்கள் – இந்திய அணிக்கு முன்னாள் தேர்வு குழு தலைவர் பரிந்துரை!

0
414
rahul dravid virat kholi

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரின் வெற்றியை தொடர்ந்து இலங்கை அணியுடன் ஆன டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்காக தயாராகி வருகிறது இந்திய அணி . பங்களாதேஷில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2=0 என்ற கணக்கில் பெற்று பங்களாதேஷ் அணியுடன் ஆன ஆதிக்கத்தை டெஸ்ட் போட்டிகளில் நிலைநாட்டி உள்ளது இந்தியா .

இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் போராடி வெற்றி பெற்றது என்று சொல்லலாம் . ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வென்றது இந்தியா.இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நிம்மதி பெருமூச்சு விட்ட காணொளியை நாம் எல்லோரும் பார்த்திருப்போம் .

- Advertisement -

இந்த காணொளியை சுட்டிக்காட்டி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் அவர்கள் இது இந்திய அணிக்கு ஆரோக்கியமான ஒரு நிலை அல்ல என்று கூறியுள்ளார் . இதுகுறித்து பேசியுள்ள அவர் பயிற்சியாளரின் அந்த காணொளியை காணும் போது இந்தியா என்ன மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார் .

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” இந்த டெஸ்ட் தொடரை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இதிலிருந்து இந்திய அணி வலுவான நிலைக்கு முன்னேற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் . தொடர்ந்து பேசிய அவர் ஏற்கனவே அக்சர் பட்டேல் மற்றும் உனட்கட் ஆகியோரை பேட்டிங் ஆர்டரில் மாற்றி இறக்கியது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன .

இனிவரும் காலங்களில் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் இணைந்து அணியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் . சுழற் பந்து வீச்சுக்கு எதிரான பேட்டிங்கில் பெயர் போன இந்திய அணியில் இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான பேட்டிங்கை பார்க்கும்போது ஏதோ ஒன்று தவறாக இருப்பதாகவே தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக ஆடும் போது இதுபோன்ற தவறுகளை செய்தால் அதிலிருந்து மீள்வது கடினம் என்று குறிப்பிட்டுள்ளார் . இந்தத் தொடரானது இந்திய அணிக்கு அபாய சங்கை முழங்கி இருக்கிறது . இதிலிருந்தும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் ஆஸ்திரேலியா போன்ற அணிகளுடன் மோதும் போது நிலைமை வேறு மாதிரியாக இருக்கும் என்று கூறினார்