ஐபிஎல் தொடரில் முதல் 3 போட்டிகளில் தோல்வி அடைந்த பின்பும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணி

0
10447
CSK and MI

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2022 டாட்டா ஐபிஎல் தொடரில் இதுவரை அதிகபட்சமாக ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும், அதற்கு அடுத்தபடியாக நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளன.

நடப்புச் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா,லக்னோ மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுடன் தோல்வியை தழுவியுள்ளது. மறுபக்கம் மும்பை அணி டெல்லி,ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுடன் தோல்வியை தழுவியுள்ளது.

- Advertisement -

லீக் தொடரில் இந்த இரு அணிகளுக்கும் இன்னும் பதினொரு போட்டிகள் மட்டுமே உள்ளன. குறைந்தபட்சம் இந்த இரு அணிகளும் 7 முதல் 8 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இனி இந்த இரு அணிகளும் சற்று சவாலான நிலையை சந்திக்க உள்ளதால், இந்த இரு அணிகளின் ரசிகர்கள் தற்போது வருத்தத்துடன் இருக்கின்றனர்.

முதல் மூன்று போட்டியிலும் தோல்வி கண்டாலும், இறுதியில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி :

ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியது கிடையாது. முதல் முறையாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகள் தோல்வியை தழுவியுள்ளது.

மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வி பெற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி அடைந்திருக்கிறது. குறிப்பாக 2014ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் ஐந்து போட்டிகளில் தோல்வி பெற்ற போதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி நேரத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

அதேபோல 2015 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியது. இருப்பினும் இறுதியில் அந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

முதலில் ஒரு சில போட்டிகளில் தோல்வி அடைந்து பின்னர் படிப்படியாக வெற்றி கண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கைவந்த கலை என்றாலும், இந்த ஆண்டு அதே மேஜிக்கை நிகழ்த்திக் காட்டுமா என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

அதேபோல இதுவரை எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்திடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று, இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதையும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.