கூலி வேலை பார்க்கும் பார்வையற்றோர் உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்

0
244
Naresh Tumda

கிரிக்கெட் பல வீரர்களின் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வந்துள்ளது. மிகவும் வறுமையில் வாழ்ந்த பல வீரர்கள் கிரிக்கெட் மூலம் எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் சிலர் இந்திய அணிக்கு ஆடினாலும் வறுமையின் பிடியிலிருந்து தப்ப முடியாமல் இன்னமும் அதே வறுமையில் சிக்கி மிகவும் சிரமப்பட்டே வாழ்ந்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு வீரர் தான் குஜராத் மாநிலத்தை சார்ந்த நரேஷ் டும்டா. இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணிக்காக விளையாடிய வீரர். கடந்த 2018ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் இவர். இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி வைத்த 309 என்ற இலக்கை 38.2 ஓவர்களில் எட்டிப் பிடித்து வெற்றி பெற்றது இந்திய அணி. 2018ம் ஆண்டு இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

- Advertisement -

ஆனால் தற்போதோ நிலமை மிகவும் மாறிவிட்டது. அப்போது இந்திய அணிக்கு ஆடிய வீரர் இப்போது, குஜராத்தில் காய்கறிகள் விற்பது மற்றும் கூலி வேலைக்கு செல்வது போன்றவற்றில் வருமானத்திற்காக ஈடுபட்டு வருகிறார். இது குறித்து நரேஷ் கூறுகையில், “இது போன்ற வேலைகள் செய்து நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் சம்பாதிகஅகிறேன். ஏற்கனவே மூன்று முறை எதாவது வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். என்னையும் என் குடும்பத்தையும் காக்க அரசு முன் வர வேண்டும்” என்று கூறினார்.

மேலும் நாங்கள் உலகக்கோப்பை வென்ற போது நிச்சயமாக நம் வாழ்வு மாறப் போகிறது என்று நினைத்தேன். ஆனால் பல உயர் அதிகாரிகளை பார்த்த பிறகும் என் வாழ்க்கை மாறவில்லை. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கூட என் நிலையை கூறிவிட்டேன் என்று கூறுகிறார் நரேஷ்.

தற்போது கொரோனா சூழலும் ஊரடங்கும் இணைந்து இவரின் வாழ்க்கையை மீண்டும் மோசமாக்கி விட்டது. தின சாப்பாட்டுக்கே சிரமப்படும் இவருக்கு எதாவது வேலையை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

- Advertisement -