விஸ்டன் வெளியிட்ட இந்தியாவின் ஆல் டைம் டி20 உலகக்கோப்பை லெவன் – அதிரடி வீரர் சேவாக் இல்லை

0
162
Virat and Sehwag

கடந்த ஆண்டு நடக்க இருந்த டி20 உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு நடைபெறுகிறது. கொரோனா பெருந்தொட்டம் காரணமாக தள்ளிப் போன இந்த தொடர் இந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணியும் கோப்பையை வென்று விட வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இந்த தொடரை எதிர்கொள்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டியுடன் வெளியேறியது. மிகவும் பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து மேற்கிந்திய தீவுகளுக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்தார் கார்லஸ் ப்ராத்வைட்.

இந்த ஆண்டுக்கான தொடர் தொடங்க இன்னமும் ஒரு மாத காலத்திற்கு மேல் இருந்தாலும் இப்பொழுதே நியூசிலாந்து ஆஸ்திரேலியா போன்ற அணிகள் தங்களது ஸ்குவாடை அறிவித்து விட்டனர். இதனால் ஒவ்வொரு அணியும் எவ்வளவு ஆர்வத்தோடு இந்த தொடரை எதிர்கொள்ள காத்திருக்கிறார்கள் என்பது நன்கு புரிகிறது. தற்போது விளையாட்டு துறையில் மிகவும் பிரபலமான விஸ்டன் பத்திரிக்கை இந்திய அணிக்காக உலக கோப்பை தொடரில் சிறப்பாக பங்காற்றிய 11 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. யார் யார் அதில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று இப்போது பார்க்கலாம்.

Gambhir T20 2007 World Cup

துவக்க வீரர்களாக ரோகித் மற்றும் காம்பீர் இடம் பெற்றுள்ளனர். காம்பீர் 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடித்த 75 ரன்களை எந்த இந்திய ரசிகராலும் மறக்க முடியாது. அதேபோல ரோகித் தான் டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர். மிடில் ஆர்டரில் விராத் கோலி ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் இடம் பிடித்துள்ளனர். டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே இந்திய அணிக்காக அதிகரங்கள் அடித்தவர் விராட் கோலி தான். 16 ஆட்டங்களில் 777 ரன்கள் குவித்துள்ளார் விராட். அதேபோல அதிக ரன்கள் அடித்த வரிசையில் மூன்றாவது இருப்பவர் யுவராஜ் சிங். ரெய்னாவின் பேட்டிங் பவுலிங் பீல்டிங் என மூன்றுமே இந்திய அணிக்கு பலமுறை கை கொடுத்துள்ளது.

2007 டி20 உலகக் கோப்பை வென்ற அணியை வழிநடத்திய தோனி கேப்டனாக விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக பதான், நெஹ்ரா மற்றும் RP சிங் இடம்பிடித்துள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்களாக அஷ்வின் மற்றும் அமித் மிஷ்ரா இடம்பிடித்துள்ளனர்.

விஸ்டன் வெளியிட்ட சிறந்த இந்திய டி20 உலகக்கோப்பை அணி – ரோகித், காம்பீர், கோலி, யுவராஜ், ரெய்னா, தோனி, இர்பான், நெஹ்ரா, RP சிங், அஷ்வின், மிஷ்ரா.