நடப்பு இந்திய அணியில் கபில் தேவ் போன்ற ஒரு ஆல்ரவுண்டரை தேடுவது பயனுற்றது – கௌதம் கம்பீர் அதிரடி

0
203
Kapil dev and Gautham Gambhir

இந்திய அணியில் விளையாடிய ஆல்ரவுண்டர் வீரர்களில் மிகவும் தலைசிறந்த ஒரு வீரர் என்றால் அது கபில்தேவ் தான். 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்டுகளையும், 5248 ரன்களையும் அவர் குவித்திருக்கிறார். அதேபோல 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 253 விக்கெட்டுகளையும், 3789 ரன்களை அவர் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1983ஆம் ஆண்டு அவரது தலைமையில் இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையையும் கைப்பற்றியது. அவருக்குப்பின் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ஒரு ஆல்ரவுண்டர் வீரர் என்றால் அது யுவராஜ் சிங் தான். யுவராஜ் சிங் போல ஸ்பின் பந்து வீச்சு கொண்ட ஆல்-ரவுண்டராக தற்பொழுது ரவீந்திர ஜடேஜா இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் கபில்தேவ் போல வேகப்பந்து வீச்சு கொண்ட ஒரு ஆல்ரவுண்டர் வீரர் தற்போது இந்திய அணியில் இல்லை என்பதுதான் மிகப் பெரிய கவலையாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு ஆல்ரவுண்டர் வீரர்தான் இந்திய அணி நீண்ட வருடங்களாக தேடிக் கொண்டு வருகிறது.

முதலில் அவர் போன்ற ஒருவரை தேடுவதை நிறுத்த வேண்டும்

சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் தொடரின் புதிய வரவாக வர உள்ள லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகருமான கௌதம் கம்பீர், “கபில்தேவ் போன்ற ஒரு வீரரை இந்திய நிர்வாகம் தேடுவது முற்றிலும் பயன் இல்லாத ஒன்று” என்று கூறியுள்ளார்.

அவர் போன்ற ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் வீரரை தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தேடுவதன் மூலமாக, அவரைப் போல ஒரு வீரர் கிடைத்துவிடப் போவதில்லை. இந்திய அணி அவர் போல சிறந்த ஒரு வீரரை எவ்வளவு முயற்சி செய்தாலும் தேடி கண்டுபிடித்து விட முடியாது. இந்த உண்மையை முதலில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உணர்ந்தாக வேண்டும்.

- Advertisement -

ரஞ்சி டிராபி தொடரிலேயே ஒவ்வொரு வீரரையும் தயார்படுத்த வேண்டும்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் உள் நுழைந்து விட்டால் அங்கே சிறப்பாக விளையாட வேண்டுமே தவிர அங்கே பயிற்சி எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்திய அணி கபில்தேவ் போன்ற ஒரு வீரர் வேண்டும் என்று யோசனை செய்து விட்டால், முதலில் இரஞ்சி டிராபி போன்ற டொமஸ்டிக் லெவல் தொடர்களில் இளம் வீரர்களை சிறந்த வகையில் தயார்படுத்த வேண்டும்.

நன்கு தயாராகி ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக அவர்கள் உருவெடுக்கும் வேலையில், சர்வதேச அளவில் இந்திய அணியில் களமிறக்கி விளையாட வைக்க வேண்டும். எனவே சர்வதேச அளவில் இந்திய அணியில் களமிறங்கிய வீரர்களை தயார் படுத்துவதை தவிர்த்து, டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளிலேயே அவர்களை நன்கு தயார் படுத்தி பின்னர் இந்திய அணியில் விளையாட வைப்பது தான் முறையான ஒன்று என்று கம்பீர் கூறியுள்ளார்.

இளம் வீரர்களுக்கான முறையான நேரத்தை கொடுக்க வேண்டும்

மேலும் பேசிய அவர் அவ்வாறு சிறந்த வகையில் தயார் படுத்தப் பட்ட வீரர்களை இந்திய அணியில் விளையாட வைத்து, ஆரம்பத்தில் அவர்கள் ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடாமல் போனால் உடனடியாக அவர்களை அணியில் இருந்து நீக்கக் கூடாது.

அவர்களுக்கான நேரத்தை சற்று கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவ்வாறு நேரம் கொடுக்காத காரணத்தினால் தான் தற்போது இந்திய நிர்வாகம் விஜய் சங்கர், ஷிவம் டுபே தற்பொழுது வெங்கடேஷ் ஐயர் என மாற்றி மாற்றி ஒவ்வொரு வீரராக விளையாட வைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.