“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி!

0
370

டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்றது இந்திய அணி.

2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்துகிறது ஐசிசி. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி நவம்பர் 13-ஆம் தேதி ஒரு நடைபெறும் இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

உலககோப்பை தொடர் துவங்குவதற்கு 10 நாட்கள் முன்பாக குவாலிஃபயர் சுற்று நடைபெறுகிறது. குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெரும்.

குரூப் 2 வில் இடம்பெற்றுள்ள இந்திய அணியுடன் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றிருக்கின்றன. கூடுதலாக ஒரு அணி குவாலிபயர் சுற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்.

இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை மெல்பர்ன் மைதானத்தில் எதிர்கொள்கிறது. அக்டோபர் 23ம் தேதி இப்போட்டி நடைபெற உள்ளது. டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் உடனான டி20 தொடரை இந்திய அணி வென்றது.

அக்டோபர் நான்காம் தேதி தென்னாப்பிரிக்கா அணியுடன் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி முடிவுற்ற பிறகு, அக்டோபர் ஐந்தாம் தேதி நள்ளிரவில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றார் போல, மும்பை விமான நிலையத்திலிருந்து டி20 உலக கோப்பைத் தொடருக்கு எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா பயணித்தனர்.

ரிசர்வ் வரிசையில் இருக்கும் வீரர்கள் இவர்களுடன் இடம்பெறவில்லை. அதேபோல் பும்ராவிற்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படாததால் அவரும் இல்லை. ஷ்ரேயாஸ் ஐயர் ரிசர்வ் வரிசையில் இருக்கிறார். இவர் தென்னாபிரிக்கா ஒருநாள் தொடரின்போது இந்திய அணியின் துணைகேப்டனாக இருக்கிறார். ஆகையால் ஒருநாள் தொடர் முடிவுற்றவுடன் அவர் ஆஸ்திரேலியா செல்கிறார்.