தமிழக கிரிக்கெட் அணி மூன்று உலகச் சாதனைகள் ; விஜய் ஹசாரே டிராபி 2022!

0
8938
Tncb

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஜய் அசாரே போட்டியில் இன்று நடைபெற்ற தமிழக மற்றும் அருணாச்சலப் பிரதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் தமிழக அணி பல சாதனைகளைப் புரிந்து இருக்கிறது.

முதலாவதாக இந்த போட்டியில் தமிழக அணி ஒரு நாள் மட்டும் லிஸ்ட் A போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக 506 ஓட்டங்களை பதிவு செய்து இருக்கிறது .இந்த போட்டியில் தமிழக வீரர் ஜெகதீசன் அதிகபட்சமாக 277 ஓட்டங்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

மேலும் தமிழக துவக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 156ஓட்டங்களை பெற்றுள்ளார்.இருவரும் துவக்க ஜோடியாக 416 ஓட்டங்களை சேர்த்து உலக சாதனை படைத்திருக்கிறார்கள்.

பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற அருணாச்சல பிரதேசம் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது தமிழக அணியின் சார்பில் துவக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் களம் இறங்கினர்.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடிய தமிழக அணி முதல் விக்கெட்டில் 416 ஓட்டங்களை 38.3 ஓவர்களில் குவித்தது.சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 38.3 பந்தில் 102 பந்துகளுக்கு 154 ஓட்டங்களை குவித்து ஆட்டம் இழந்தார் இதில் 2 சிக்ஸர்களும் 19 பௌண்டரிகளும் அடக்கம் .

சாய் சுதர்சன் ஒரு புறம் ஆட்டம் இழந்தாலும் மறு முனையில் சிறப்பாக ஆடிய ஜெகதீசன் 277 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தின்41 வது ஓவரின் 4 வது பந்தில் ஆட்டம் இழந்தார். இவர் 141 பந்துகளில்277 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தார் இதில் 15 சிக்ஸர்களும் 25 பௌண்டரிகளும் அடக்கம் .
இருவரும் சேர்ந்து முதலாவது விக்கெட் ஜோடியாக 416 ஓட்டங்களை பெற்றது ஒரு உலக சாதனையாகும் .

மேலும் இந்த போட்டியில் ஜெகதீசன் பெற்ற 277 ஓட்டங்கள் உலக கிரிக்கெட் மற்றும் லிஸ்ட் A கிரிக்கெட்டில் தனி நபரின் அதிக பட்ச ஸ்கோர் ஆக பதிவாகி உள்ளது.மேலும் இது ஜெகதீசன் இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் தொடர்ச்சியாக அடிக்கும் ஐந்தாவது சதமாகும் .இதன் மூலம் இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்கக்கார வின் தொடர்ச்சியான சத சாதனையை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்திருக்கிறார் ஜெகதீசன் .

அதன் பின் காலம் இறங்கிய அபராஜித் மற்றும் இந்திரஜித் சகோதரர்களின் அதிரடியில் தமிழக அணி 506 ஓட்டங்களை நிர்ணயிக்க பட்ட 50 ஓவர்களில் குவித்தது.
பாபா அபராஜித் 32 பந்துகளில் 31 ஓட்டங்களுடன் பாபா இந்திரஜித் 26 பந்துகளில் 31 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

போட்டியின் சுருக்கமான ஸ்கோர் விவரம் :

சாய் சுதர்சன் 154 (102)

ஜெகதீசன் 277(141)

அபராஜித் 31(32)

இந்திரஜித் 31(26)

தமிழக அணியின் ஸ்கோர் 506/2

50 ஓவர்களில்