“கில் போப்கிட்ட இருந்து இத எடுத்துக்கனும்.. 2 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு” – மஞ்ச்ரேக்கர் அனலைஸ்

0
60
Gill

இங்கிலாந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு வருகின்ற நாள் நெருங்கியதில் இருந்து, டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்தியாவில் எப்படி விளையாடும்? என்கின்ற கேள்விகள் பெரிதாகிக் கொண்டே சென்றன.

இதற்கு ஏற்றபடி முதல் டெஸ்டில் இங்கிலாந்து 200 ரன்கள் கூட எட்டாவது என்ற நிலையிலிருந்து தட்டுத்தடுமாறி 246 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதே ஆடுகளத்தில் இந்தியா 436 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்தியாவில் இங்கிலாந்து டெஸ்ட் அணியால் பாஸ்பால் முறையில் விளையாட முடியாது என திட்டவட்டமாக விமர்சகர்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள். இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்ற கருத்துகள் வர ஆரம்பித்தன.

இப்படியான நிலையில்தான் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்கள் குவித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே தற்பொழுது இரண்டு அணிகளும் போட்டியில் இருக்கின்றன.

இதற்கு மிக முக்கிய காரணமாக இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் போப் இருக்கிறார். தனி வீரராக இந்தியாவின் தரமான சுழல் பந்துவீச்சுக்கு எதிராக 196 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவே மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவரை உதாரணமாக வைத்து இந்தியா பேட்ஸ்மேன் கில் எப்படி விளையாட வேண்டும் என்று மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “போப் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய விதத்தில் முக்கியமான ஒரு வித்தியாசம் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விளையாடிய பொழுது அவரிடம் நல்ல இண்டெண்ட் இருந்தது. அவர் பவுண்டரிகள் அடித்தது மட்டுமில்லாமல் ஒன்று இரண்டு ரன்கள் எடுக்கவும் முயற்சி செய்தார். இதை கில் தன்னுடைய பேட்டிங்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இருவருமே ஃபிரண்ட் புட் பேட்ஸ்மேன்கள்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு 231 ரன் இலக்கு.. இரட்டை சதத்தை தடுத்தார் பும்ரா.. முதல் டெஸ்டில் வெற்றி பெறுவது யார்?

இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் வான்கடேவிலும், ஆஸ்திரேலியா ஸ்மித் புனேவிலும், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான சதங்கள் இந்தியாவில் அடித்து பார்த்திருக்கிறேன். சமீப காலத்தில் இது போன்ற ஒரு ஆடு களத்தில் வெளிநாட்டு வீரர் ஒருவர் அடித்த அற்புதமான சதமாக இது இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.