கோவிட் தொற்றுள்ள ஆஸ்திரேலியா வீராங்கனைக்கு இந்தியாவுடனான இறுதிப்போட்டியில் ஆட அனுமதி!

0
97
Tahlia McGrath

தற்போது இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 8 அணிகள் இரு குழுவாக பிரிக்கப்பட்ட இந்த காமன்வெல்த் கிரிக்கெட் போட்டி 20 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.

இதில் தற்போது ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியும் இறுதிப்போட்டியில் விளையாடி வருகிறது. அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியும், ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன!

- Advertisement -

இந்த போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த தஹலியா மெக்ராத் என்ற வீராங்கனைக்கு கோவிட் பரிசோதனையில் கோவிட் இருப்பது உறுதியானது. இதனால் போட்டிக்கான டாஸ் 15 நிமிடங்கள் தாமதமாக போடப்பட்டது!

காரணம் இந்த வீராங்கனை ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருந்தார். இதனால் இவரை இந்த ஆட்டத்தில் விளையாட வைக்கலாமா இல்லை கூடாதா என்று முடிவெடுக்க ஆலோசனை நடந்தது. இதனால் இந்தப் போட்டிக்கான டாஸ் 15 நிமிடங்கள் தாமதமாக போடப்பட்டது.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்தப்போட்டியில் கோவிட் தொற்றுள்ள ஆஸ்திரேலிய வீராங்கனையை ஆட அனுமதிப்பது என்று முடிவானது. நிச்சயம் இது ஒரு பெரிய விவாதத்தை கிளப்ப கூடிய முடிவுதான். ஆனால் இந்த முடிவிற்கு எப்படி போட்டி நடத்தும் நடுவர்கள் குழு வந்தது என்று புரியவில்லை.

- Advertisement -

தற்போது டாசில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய பேட்டியின்போது நான்காவது வீராங்கனையாக களம் இறங்கிய கோவிட் பாதிக்கப்பட்ட வீராங்கனை 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

இதையடுத்து களமிறங்கிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 162 ரன் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இதில் வெல்லும் அணிக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் தோற்கும் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்கும்!