டி20 உலகக் கோப்பை; புஜாரா உத்தப்பாவின் இந்திய அணியின் பிளேயிங் லெவன்!

0
218
ICT

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் ஆரம்பிக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்காக இந்திய அணி நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட அணி குறித்து வெளியில் பல விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்சல் படேல், ஆர்.அஸ்வின் ஆகியோர் திரும்பவும் இந்திய அணிக்குள் வந்திருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக்கின் கனவு பாதி பலித்திருக்கிறது.

- Advertisement -

பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சமீபத்தில் கவர்ந்துள்ள இளம் இடக்கை வேகப்பந்துவீச்சாளர் பஞ்சாப்பை சேர்ந்த அர்ஸ்தீப் சிங் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக அக்சர் படேல் இடம் பெற்றிருக்கிறார். அணியில் இன்னொரு பிரதான சுழற்பந்து வீச்சாளராக வழக்கம்போல் இருக்கிறார்.

கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு தோற்று வெளியேறி வந்தது பல அதிர்ச்சி அலைகளை இந்திய கிரிக்கெட்டில் உருவாக்கியது. அதற்கடுத்து அணிக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்த வகையில் வருகின்ற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கின்ற டி20 உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட்டிற்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியைக் கொண்டு இந்திய அணி வீரர்களான செதேஷ்வர் புஜாரா மற்றும் ராபின் உத்தப்பா தங்களின் இந்திய அணியின் பிளேயிங் லெவனை வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கருத்துக்களில் தான் இருக்கிறார்கள். ஒருவர் ரிஷப் பண்ட் இடம் போக, ஒருவர் அதற்கு பதிலாக தீபிக் ஹூடாவிடம் போயிருக்கிறார்.

- Advertisement -

செதேஷ்வர் புஜாராவின் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய பிளேயிங் லெவன்:

கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் கே எல் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்,ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், ஹர்சல் படேல், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாகல்.

ராபின் உத்தப்பாவின் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய பிளேயிங் லெவன் :

கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் கே எல் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ,ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், ஹர்சல் படேல், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாகல்.