பெர்த் மைதானத்தில் பயிற்சியை ஆரம்பித்த டி20 உலகக்கோப்பை இந்திய அணி – ட்விட்டர் இணைப்பு!

0
347
ICT

ஆஸ்திரேலியாவில் இந்த மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் பிரதான சுற்றில் 12 அணிகள் இரு குழுக்களாகப் பிரிந்து மோத இருக்கின்றன இருக்கின்றன.

12 அணிகள் பங்கேற்கும் பிரதான சுற்றுக்கு, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து, நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.

- Advertisement -

மீதி நான்கு இடங்களுக்கு இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நமிபியா, யு ஏ இ ஆகிய 8 அணிகள் போட்டியிடுகின்றன.

இந்த 8 அணிகளும் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு, இந்த இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிரதான 12 அணிகள் பங்குபெறும் சுற்றுக்குத் தகுதி பெறும். இதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 16ஆம் தேதி ஆரம்பிக்கிறது.

தகுதி சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 21ஆம் தேதி முடிவடைய, 12 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதும் பிரதான சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 22ஆம் தேதி துவங்குகிறது. இதில் இரு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் அணி தேர்வு செய்யப்படும்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்க நேற்று கிளம்பி சென்றது. 12 அணிகள் பங்குபெறும் பிரதான சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை மெல்போர்ன் மைதானத்தில் அக்டோபர் 23ஆம் தேதி சந்திக்கிறது.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி அக்டோபர் 10 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெர்த் மைதானத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறது. இது இல்லாமல் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தச் செய்தியை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. அதற்கான இணைப்பு கீழே.