“டி20 உலக கோப்பை.. இவர்தான் கேப்டனா இருக்கனும்.. கோலி தானா வருவார்” – கம்பீர் அதிரடி ஸ்டேட்மென்ட்!

0
11721
Gambhir

அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணிக்கு மேற்கொண்டு 11 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியை விளையாட வைத்து பரிசோதனைகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் செய்து வருகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தங்களது எதிர்கால சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையை தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறி இருக்கிறது.

இந்த விஷயத்தில் விராட் கோலி இதுவரை தெளிவான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. அதே சமயத்தில் ரோகித் சர்மா பற்றிய வெளிவந்த தகவலில், ரோகித் சர்மா மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இப்படியான நிலையில் எந்த மாதிரியான டி20 உலகக்கோப்பை இந்திய அணி உருவாக்கப்பட வேண்டும்? யார் தலைமை தாங்க வேண்டும்? என்பது குறித்து நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் இருந்து வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “ரோஹித் மற்றும் விராட் கோலி இருவருமே டி20 உலகக் கோப்பை இந்திய அணிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும் ரோகித் சர்மாவை டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக பார்க்க விரும்புகிறேன்.

ஆமாம் ஹர்திக் பாண்டியா டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். ஆனால் நான் மேலும் ஒரு உலக கோப்பையில் ரோகித் சர்மாவை கேப்டனாக பார்க்க விரும்புகிறேன்.

ரோஹித் சர்மாவை தேர்வு செய்வதாக இருந்தால் அவரை வெறும் பேட்ஸ்மேன் ஆக மட்டும் தயவுசெய்து தேர்வு செய்ய வேண்டாம். அவர் ஒரு கேப்டனாக மிகவும் அழகாக ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் தன்னை நிரூபித்து செயல்பட்டு இருக்கிறார்.

நீங்கள் ரோகித் சர்மாவை தேர்வு செய்தால் தாமாகவே விராட் கோலி தேர்வாகி விடுவார். டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா விளையாட முடிவு செய்தால், அவர் பேட்டிங் செய்யக்கூடிய கேப்டனாக இருக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!