டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியைப் பற்றி ரோகித் சர்மா சூசக தகவல்!

0
468
Rohit sharma

விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக வந்த ரோகித் சர்மாவிற்கு பல்வேறு சவால்கள் அணியில் இருந்தது. புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் இணைந்து ஒரு புதிய விதமான இந்திய அணியை அவர் கட்டமைத்து இருக்கிறார் என்று கூறலாம்!

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் படுதோல்வியை சந்தித்து முதல் சுற்றில் இருந்து இந்திய அணி வெளியேறிய பொழுது, அடுத்தடுத்து இந்திய அணிக்கு மிகப்பெரிய நெருக்கடிகள் உருவாகியது. இந்திய அணிக்கு வெள்ளைப்பூண்டு கிரிக்கெட்டில் ஒரு புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. அதை ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணி மிகச் சிறப்பாக அணிக்குள் கொண்டு வந்திருக்கிறது. தற்பொழுது விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் வீரர்கள் தைரியமாக ஆடும் மனப்பாங்குடன் இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் ரோகித் சர்மா ராகுல் டிராவிட் உருவாக்கியுள்ள அணி என்பது, எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்து இருப்பதில்லை. ஒரு வீரர் இல்லை என்றால் அந்த வீரரின் இடத்தை நிரப்ப இன்னொரு வீரர் தயாராகவே இருக்கிறார். யான ஒரு அணியை
உருவாக்க பல வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து இந்தக் கூட்டணி ஒரு வலிமையான பென்ச் வலிமையை உருவாக்கியிருக்கிறது.

தற்போது இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மனம் திறந்து பல்வேறு கருத்துக்களை பேசியிருக்கிறார். அவர் கூறும் பொழுது ” சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பை தொடர் மீண்டும் நடக்கிறது. நாங்கள் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் துபாயில் பாகிஸ்தான் அணியோடு விளையாடி இருந்தோம். ஆனால் அப்போது இருந்த அணியும் நிலைமையும் வேறு. இருக்க நிலைமையும் அணியும் வேறு. வித்தியாசமான அணி. நாங்கள் இங்கு உள்ள மொத்த நிலைமைகளையும் ஆராய வேண்டும். 40 டிகிரி வெப்பத்தில் இன்று விளையாடி ஆகவேண்டும். அதற்கேற்றபடி ஒரு அணியாக நாங்கள் முழு அளவில் தயாராக வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா ” டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவில் ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகள் டி20 தொடர்கள் உள்ளன. உலகக் கோப்பைக்கான எங்கள் அணி 80 அல்லது 90 சதவீதம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எப்படியும் உலகக் கோப்பைக்கு இதிலிருந்து ஒரு நான்கு மாற்றங்கள் ஆவது இருக்கலாம். நாங்கள் தற்போது யுனைடெட் அரபு எமிரேடிலும் இந்தியாவிலும் விளையாட இருக்கிறோம். டி20 உலகக் கோப்பை நடக்கும் ஆஸ்திரேலியாவின் நிலைமைகள் வேறாக இருக்கும். அங்கு எந்த அணி சரியாக இருக்கும் என்று நாங்கள் சரி பார்க்க வேண்டும்” என்றும் கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பும்ரா, ஷமி இருவரும் என்றென்றும் இந்திய அணியில் இருக்க மாட்டார்கள். எனவே நாம் மற்ற வீரர்களையும் உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நானும் ராகுல் பாயும் அணியின் பெஞ்ச் வலிமையை எவ்வாறு உருவாக்குவது என்று கலந்து ஆலோசித்தோம். ஏனென்றால் நாங்கள் அதிக போட்டிகளில் விளையாடுகிறோம் அதனால் காயங்களும் அதிகமாக இருக்கும் இதை வைத்து நாங்கள் அணியை உருவாக்க வேண்டும். இதனால் நாம் ஒரே வீரர்களை நம்பி விளையாடிக் கொண்டு இருக்க முடியாது. எல்லா வீரர்களுக்கும் மாற்று வீரர்களை கொண்டு பல அணிகளாக நாம் வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்!