டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி எதிர்த்து விளையாடும் இரு அணிகள்!

0
275
ICT

டி-20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஆரம்பிக்கிறது. 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தகுதி சுற்று போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தகுதி சுற்று போட்டியில் எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், உலகக் கோப்பையின் முதல் சுற்றுக்குள் வரும்.

தகுதி சுற்றுக்கான இரு குழுக்கள் :
குழு ஏ நெதர்லாந்து, நமிபியா, இலங்கை, யுஏஇ அணிகள் இடம்பெற்றுள்ளன.
குழு பி வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்து ஸ்காட்லாந்து ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த இரு குழுக்களிலும் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள், எட்டு பிரதான அணிகளை நான்கு நான்கு அணிகளாக இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது, அந்தக் குழுவில் சேர்க்கப்படும்.

உலகக் கோப்பையின் முதல் சுற்று குழு ஏ, குழு பி என்று ஆறு ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டு, இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கொண்டு அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்படும். இதிலிருந்து இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு சாம்பியன் அணி கண்டறியப்படும்.

இந்திய அணி பி குழுவில் இடம் பெற்றுள்ளது. இந்தக் குழுவில் இப்போதைக்கு பாகிஸ்தான் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் உள்ளன. தகுதி சுற்றில் ஏ குழுவில் இரண்டாம் இடம்பிடிக்கும் அணியும், பி பிரிவில் முதல் இடத்தைப் பிடிக்கும் அணையும் இந்தியா இடம்பெற்றுள்ள குழுவில் நுழையும். அவ்வகையில் பார்த்தால் இந்தியா இடம் பெற்றுள்ள குழுவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கும்.

இந்த உலக கோப்பையின் முதல் சுற்று போட்டிகள் அக்டோபர் இருபத்தி இரண்டாம் தேதி ஆரம்பிக்கிறது. இறுதிப்போட்டி நவம்பர் 13ம் தேதி நடக்கிறது. துவக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. அதேநாளில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி அதற்கு அடுத்து அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

தகுதி சுற்றோடு சேர்த்து இந்த உலகக்கோப்பைக்கு மொத்தம் 16 அணிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த பதினாறு அணிகளுக்கும் இரண்டு பயிற்சிப் போட்டிகள் வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையில் இந்திய அணிக்கு இந்த பயிற்சி ஆட்டங்கள் உள்ளன. இரண்டு பயிற்சி ஆட்டங்களில் அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் கபா மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளோடு இந்திய அணி விளையாடுகிறது.