2 முக்கிய வீரர்கள் நீக்கம்; ஹர்திக் பாண்டியா கேப்டன்.. இந்தியா-இலங்கை தொடருக்கான டி20 அணி அறிவிப்பு!

0
2136

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவிருக்கும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரை முடித்த பிறகு, இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. வருகிற ஜனவரி மாதம் இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளன.

- Advertisement -

தலா மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 16 பேர் கொண்ட பட்டியல் கீழே உள்ளது.

டி20 அணியில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சேர்க்கப்படவில்லை. சொந்த காரணங்களுக்காக கேஎல் ராகுல் விலகியுள்ளார். ரிஷப் பன்ட்-க்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த டி20 அணியில் ருத்ராஜ், சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் முகேஷ் குமார் புதிதாக இடம்பெற்று இருக்கிறார்.

- Advertisement -

இலங்கை அணியுடனான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். சூரியகுமார் யாதவ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இஷான் கிஷன் முதன்மை விக்கெட் கீப்பராக விளையாடுகிறார்.

சீனியர் வீரர்களுக்கு இனி டி20 அணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படாது என பேச்சுக்கள் அடிபட்டன. விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் நீக்கப்பட்டதன் மூலம் அது உண்மையென வெளிப்படையாக சொல்லாமல் சொல்லியுள்ளது பிசிசிஐ.

டி20 தொடருக்கான இந்திய அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.