தற்போது டி20 தொடரில் அசுர வேகத்தில் மிரட்டும் உம்ரான் மாலிக்- வீடியோ இணைப்பு!

0
705
SMAT

இதுவரையிலான இந்திய கிரிக்கெட்டின் அதிவேகப் பந்து வீச்சாளர் யாரென்றால், ஜம்மு காஷ்மீரில் இருந்து தற்போது கிளம்பி வந்திருக்கும் இளம் வீரர் உம்ரான் மாலிக் என்று சந்தேகமில்லாமல் கூறலாம்!

மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசுவது அவரது ஒரு சிறப்பு என்றால், அதே வேகத்தில் தொடர்ந்து அவரால் வீசிக் கொண்டே இருக்க முடியும் என்பதுதான் தனிச்சிறப்பு!

- Advertisement -

இந்திய சூழ்நிலையில் இப்படி ஒரு அதிவேக பந்து வீச்சாளருக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனால் இவர் மேல் ரசிகர்களுக்கு மட்டுமன்றி இந்திய அணி நிர்வாகத்திற்கும் ஒரு தனி கவனம் உண்டு.

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இவருக்கு அயர்லாந்து டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் பந்து வீச்சில் இருக்கும் சில தவறுகளை திருத்த இவருக்கு தொடர்ந்து உள்நாட்டில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது நடந்து வரும் இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையது முஷ்டாக் அலி தொடரில் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக விளையாடி வரும் உம்ரான் மாலிக் அதிவேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை அலற விட்டு வருகிறார்.

- Advertisement -

இந்தத் தொடரில் மகாராஷ்டிரா அணியுடன் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அந்தப் போட்டியில் அவரது வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறியதை பார்க்க பரிதாபமாக இருந்தது. மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ருதுராஜ் வரை தடுமாறிப் போனார்கள். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!