15 ரன்களுக்கு சுருண்ட சிட்னி தண்டர்ஸ்; ஆஸ்திரேலியா பிக்பேஷ் தொடரில் அதிர்ச்சி!

0
2807
Bigbash

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் டி20 தொடரான ஐபிஎல் போல ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் இந்தக் காலக்கட்டத்தில் பிக்பேஷ் லீக் என்ற டி20 தொடர் நடைபெறுகிறது!

சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த இத்தொடரில் இன்று பீட்டர் சிடில் தலைமையிலான அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் ஜேசன் சங்கா தலைமையிலான சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மிகக் குறைவான ரண்களுக்கு சுருண்டு மோசமான சாதனையை படைத்திருக்கிறது சிட்னி தண்டர்ஸ் அணி!

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு ஸ்ட்ரைக்கர் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் கிறிஸ் லின் 36 மற்றும் கிராண்ட் டி ஹோம் 33 ரன்கள் எடுத்தனர்.

இதற்கு அடுத்து களம் இறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை வேகப்பந்துவீச்சாளர்கள் ஹென்றி தோர்டான் 2.5 ஓவர்கள் ஒரு மெய்டன் 5 ரன்கள் 5 விக்கெட்டுகள், வெஸ் அகர் இரண்டு ஓவர்கள் ஆறு ரன்கள் 4 விக்கெட்டுகள், மேத்யூ ஷார்ட் ஒரு விக்கெட் என அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்தனர். இதனால் சிட்னி தண்டர்ஸ் அணி வெறும் பதினைந்து ரண்களில் சுருண்டது.

சிட்னி தண்டர்ஸ் அணியில் இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேலஸ், தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் ரூசோவ் ஆகியோர் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான செயல்பாட்டின் மூலம் இந்தத் தொடரில் மிகக்குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை படைத்திருக்கிறது சிட்னி தண்டர்ஸ் அணி!

- Advertisement -