இந்தியாவில் ஆக்ரோஷமா ஆடுறேன்னு அசிங்கப்பட்டு வராம, தொடரை ஜெயிக்க இதை மட்டும் பண்ணுங்க – ஆஸி., வீரர்களுக்கு கில்கிறிஸ்ட் அறிவுரை!

0
4123

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்றால் இதைத்தான் செய்ய வேண்டும் என ஆஸ்திரேலியா வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் ஆடம் கில்கிறிஸ்ட்.

வருகிற ஜனவரி 18ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் துவங்க இருக்கிறது. தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடர் முடிவுற்றவுடன் பிப்ரவரி 9ம் தேது பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடக்கவிருக்கிறது.

- Advertisement -

இதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் பிப்ரவரி முதல் வாரமே இந்தியாவிற்கு வந்து தீவிர பயிற்சியில் ஈடுபட இருக்கின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கடைசி தொடர் இதுவாகும். இதை இந்திய அணி கைப்பற்றும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம். ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு வரவிருக்கிறது. மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும் இந்த அணி, இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை கூறியுள்ளார்.

“கடந்த காலங்களில் நாங்கள் இந்திய மண்ணில் செய்ய முயற்சித்ததை தற்போது வரும் ஆஸ்திரேலியா அணி செய்கிறார்களா? அதை வெற்றிகரமாக முடிகிறார்களா? என்பதை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் இருக்கிறேன். முதல் ஓவரில் இருந்தே ஸ்பின்னர்களை வைத்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்திய மண்ணில் நன்றாக செயல்பட வேண்டும் என்றால், உங்கள் ஆக்ரோசத்தை அடக்கிக் கொண்டு துவக்கம் முதல் தடுப்பாட்டத்தில் இறங்க வேண்டும். அதாவது முதல் ஓவரில் இருந்தே ஸ்பின்னர்களை வைத்து ஸ்டம்ப் நோக்கி தாக்குதல் நடத்தி திணறடிக்க வேண்டும்.

அதேபோல் நிறைய ஸ்லிப் வீரர்கள் தேவையில்லை. ஒருவர் அல்லது இரண்டு பேர் இருந்தால் போதும். மிட் விக்கெட் திசையில் கேட்ச் அதிகமாக வரும். அதை பிடிப்பதற்கு ஒருவர் நிற்க வேண்டும். ஷார்ட் கவர் திசையில் ஒருவர் நிற்க வேண்டும். மற்றவர்கள் ஆங்காங்கே பவுண்டரி திசையில் நின்று கொண்டு பவுண்டரிகளில் வரும் ரன்களை தடுக்க வேண்டும்.

துவக்கத்தில் இருந்தே ரன்களை கட்டுப்படுத்தி, ஒரு கட்டத்திற்கும் மேல் பேட்ஸ்மேன்களை அடிக்கத்தூண்ட வேண்டும். அப்போது தவறுகள் நடக்க நேரிடும். அதை வைத்து விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். இந்திய மண்ணில் இது ஒன்று மட்டும் தான் எடுபடும். மிகவும் பொறுமை அவசியம்.

இதுவரை பெற்ற வெற்றிகளை மறந்து விட்டு புத்தம் புது அணியாக உள்ளே வர வேண்டும். உங்கள் ஆக்ரோஷம் எதுவும் இந்திய மண்ணில் எடுபடாது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இந்திய மைதானங்கள் உங்களது புத்திசாலித்தனத்தை பெரிதளவில் சோதிக்கும் என்று மனதில் கொண்டு செயல்படுங்கள்.” என அறிவுறுத்தினார்.