சர்வதேச கிரிக்கெட் விளையாட ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ள 5 நாடுகள்

0
4879
Switzerland Cricket Team

ஐசிசி கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் போட்டியை உலக அளவில் தற்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் ஏறக்குறைய நிறைய நாடுகளில் விளையாடும் விளையாட்டாக பார்க்கப்படுவது ஃபுட்பால். ஃபுட்பால் விளையாட்டைப் போலவே கிரிக்கெட் போட்டியையும் உலக அளவில் பிரபலம் அடைய நிறைய விஷயங்களை ஐசிசி கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது.

சமீபத்தில் ஜப்பான், நைஜீரியா மற்றும் தாய்லாந்து போன்ற அணிகள் சர்வதேச ஐசிசி கிரிக்கெட் அணிகளின் பட்டியலில் தனது பெயரை இணைத்து உள்ளது. இந்த நாடுகளும் தற்போது சர்வதேச அளவில் ஐசிசி வாரியத்துக்கு கட்டுப்பட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தை பெற்றுள்ளது. பப்புவா நியூ கோயின நாடு அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை டி20 தொடரில் விளையாடும் கனவை நனவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படி பல்வேறு புதிய நாடுகள் கிரிக்கெட் விளையாடி வரும் நிலையில், இதற்கு முன்னர் கிரிக்கெட் விளையாடிய ஒரு சில நாடுகளை ஐசிசி கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அப்படி ஐசிசி கிரிக்கெட் வாரியத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அணிகள் எவை என்று தற்பொழுது பார்ப்போம்

1. சுவிட்சர்லாந்து

டென்னிஸ் ஜாம்பவான் வீரர் ரோஜர் ஃபெடரர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தை ஐசிசி கிரிக்கெட் வாரியத்தின் மூலமாக 1985 ஆம் ஆண்டு இந்த நாடு முதன் முறையாக பெற்றது.

தன்னுடைய முதல் சர்வதேச போட்டியை கிரீஸ் அணிக்கு எதிராக 1990 ஆம் ஆண்டு விளையாடியது. 2010 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தனிச் சார்பு அதிகாரிகள் சுவிஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றது. இது அந்த அணி நிர்வாகதுக்குள்ளேயே சில விமர்சனங்களை கொண்டு வந்தது.

- Advertisement -

இதன் காரணமாக ஐசிசி கிரிக்கெட் வாரியம் இந்த அணியை சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியாத படி சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

2. மொரோக்கோ

1999 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மொரோக்கோ அணி சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தது. சுமார் 20 ஆண்டுகளாக ஐசிசி விதிமுறையின் கீழ் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த இந்த அணி கடந்த ஆண்டு சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடும் தகுதியை இழந்தது.

அணி நிர்வாகம் இடையில் சந்தேகப்படும் படி சில விஷயங்கள் நடைபெற்றதால் ஐசிசி கிரிகெட் கமிட்டீ இந்த அணியை சஸ்பெண்ட் செய்தது. இதனால் கடந்த ஆண்டு முதல் சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் மொரோக்கோ அணி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

3. கியூபா

மேற்கிந்திய தீவுகள் நாட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இந்த நாட்டில் குத்துச்சண்டை மிகவும் பிரபலம். 1952 ஆம் ஆண்டு இந்த அணி ஜமைக்கா அணிக்கு எதிராக சில கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருப்பது அவ்வளவாக அனைவருக்கும் தெரிந்திடாத விஷயமாகும்.

2002ஆம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை மொத்தமாக பதினொரு ஆண்டுகள் ஐசிசி கிரிக்கெட் வாரியத்துக்கு கட்டுப்பட்டு சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தது. ஆனால் அதற்குப் பின்னர் ஐசிசி வாரியம் நிர்ணயித்த ஒருசில விதிமுறைகளை பின்பற்ற தவறியதால் ஐசிசி கிரிக்கெட் வாரியம் இந்த அணியை சர்வதேச அளவில் சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

4. டோங்கா

கிழக்கு ஆசிய பசிபிக் பகுதியில் இருக்கும் இந்த நாடு 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடுவதற்காக தகுதி சுற்று ஆட்டங்களில் விளையாடியது. இருப்பினும் அந்த அணியால் 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் விளையாட முடியவில்லை.

2000ம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஐசிசி வாரியத்தின் உரிமையை பெற்று சர்வதேச அளவில் போட்டிகளில் விளையாடி வந்தது. ஆனால் அதற்குப் பின்னர் இந்த அணி நிர்வாகம் ஒரு சில விதிமுறைகளை பின்பற்ற தவறியதால் சர்வதேச அளவில் விளையாடும் அந்தஸ்தை இந்த அணி இழந்தது. விதிமுறையை மீறி இதன் காரணமாக ஐசிசி கிரிக்கெட் வாரியம் இந்த அணியை சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

5. புருனே

ஆசிய கண்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நாடுதான் இந்த நாடு. முதல்முறையாக 1992ஆம் ஆண்டு இந்த நாடு ஐசிசி சர்வதேச விதிமுறையின் கீழ் சர்வதேச போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தை பெற்று விளையாடி வந்தது.

2015ஆம் ஆண்டு வரை வெளிவந்த அந்த அணி அதற்குப் பின்னர் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாட முடியவில்லை. 1996 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜப்பான் அணிக்கு எதிராக முதல் சர்வதேச போட்டியில் இந்த அணி விளையாடியது குறிப்பிடத்தக்கது.

2014ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் வாரியம் இந்த அணியை சஸ்பெண்ட் செய்தது. அதற்கு பின்னர் 2015 ஆம் ஆண்டு இந்த அணையை சர்வதேச அளவில் விளையாட முடியாதபடி இந்த அணியின் காண்ட்ராக்டை முடிவுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.