ஸ்கை அடிக்கிற ஷாட்களை பாத்துகிட்டே இருக்கலாம்; என்னால நினைச்சுக்கூட பாக்கமுடியல – நியூசி., வீரர் பேட்டி!

0
3792

சூரியகுமார் யாதவ் விளையாடும் ஷாட்களை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் கிளென் பிலிப்ஸ்.

டி20 உலக கோப்பையில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து டி20 தொடரிலும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார் சூரியகுமார் யாதவ்.

இரண்டாவது டி20 போட்டியில் 55 பந்துகளில் 111 ரன்கள் விலாசினார். அணியின் 60 சதவீதத்திற்கும் அதிகமான கரன்களை இவர் மட்டுமே அடித்திருந்தார். மேலும் இவர் அடித்த பல சாட்டுகள் பல முன்னணி வீரர்களாலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது. அவ்வளவு நேர்த்தியாக விளையாடினார்.

இவரின் ஆட்டத்தை கண்டு எதிரணி கேப்டன் கேன் வில்லியம்சனே புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் கிளென் பிலிப்ஸ் சூர்யா குமார் யாதவ் பற்றி பேட்டி அளித்திருக்கிறார். அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டதாவது:

“சூரியகுமார் யாதவ் விளையாடுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவர் விளையாடும் பல சாட்டுகள் என்னால் முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது. எப்படி இவ்வளவு நேர்த்தியாக வித்தியாசமான சாட்டுகளை விளையாடுகிறார் என்று என் மூளைக்குள் இப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

பந்துவீச்சாளர் அடுத்த பந்தை இங்குதான் போடுவார் என்று ஒரு யூகத்தை வைத்துக்கொண்டு அவர் விளையாடுவது போல இல்லை. சரியாக கணித்து சரியான இடத்தில் அடிக்கிறார். பவுண்டரிகளை விட அதை சிக்ஸர்களாக மாற்றுவது எனக்கு இன்னும் வியப்பாக இருக்கிறது.

சில நேரங்களில் அப்படிப்பட்ட ஷாட்கள் தவறாக முடியலாம். அப்போது அவருக்கு சரிவுகளும் ஏற்படலாம். ஆனால் சரியாக அமையும் நேரத்தில் அந்த ஷாட்களை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. சிறப்பான ஆட்டத்தை தற்போது சூரியகுமார் யாதவ் வெளிப்படுத்தி வருகிறார். லெந்த் மற்றும் லைன் இரண்டையும் கணித்து அழகாக பேட்டை எடுத்துச் சென்று தூக்கி அடிக்கும் பொழுது வைத்த கண்ணை எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவரது பார்ம் சரியாமல் பார்த்துக்கொள்ள வாழ்த்துக்கள்.” என்றார்.