சூரியகுமார் ஐடியா சரி இல்லை! – தினேஷ் கார்த்திக் விமர்சனம்!

0
430
DK

இந்திய அணி நேற்று நியூசிலாந்து அணி உடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் மோதியது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி கொஞ்சம் தடுமாறி கடைசி பந்துக்கு முன் பந்தில் வெற்றி பெற்றது!

சுழற் பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் கடுமையாகத் தடுமாறினார்கள். சுழற்பந்தை விளையாடுவதில் கைதேர்ந்த இந்திய வீரர்கள் சில காலமாகத் தடுமாறி வருவது வாடிக்கையாகி வருகிறது. நேற்றும் இது தொடரச் செய்தது.

- Advertisement -

முதல் மூன்று விக்கட்டுகள் விழுந்த நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் இருவரும் சேர்ந்து பொறுமையாக விளையாடி அணியை கரைச் சேர்த்தார்கள். ஆனால் இவர்களும் சுழற்பந்தில் தடுமாறவே செய்தார்கள்.

இதைக் குறிப்பிட்டு பேசியுள்ள தினேஷ் கார்த்திக் ” சூரிய குமாரின் ஷாட் தேர்வுகள் சுவாரசியமாக இருந்தது. அவர் இன்னிங்ஸ் முழுவதும் ஸ்பீடு போட்டாக இருக்க விரும்பினார். உதாரணமாக நான்கு பீல்டர்கள் லெக் சைடில் நின்ற போதும் அவர் ஸ்வீப் ஷாட் ஆட போனார். அந்த இடத்தில் மைதானத்தின் அளவு பெரியது. இது எனக்கு சிறந்த தேர்வாக இல்லை. அவர் இப்படியான விஷயங்களில் கொஞ்சம் முன்னேற்றம் காண வேண்டும்!” என்று கூறியுள்ளார்!

தொடர்ந்து பேசியுள்ள அவர்
” அவர் அந்த ஷாட்டில் அவுட் ஆகி இருந்தால், அவர் சிக்ஸர் அடிப்பதற்கான ஷாட் இது இல்லை என்று சொல்லி வருந்தி இருப்பார். விக்கெட் மெதுவாக இருந்தது பந்துவீச்சாளரும் வேகமாக வீசவில்லை. இப்படி இருக்கும் பொழுது நீங்கள் டீப் ஸ்கொயர் லெக்கில் அடிக்க முயற்சி செய்கிறீர்கள். அந்த இடம் மைதானத்தின் பெரிய பகுதி. இது உங்களுக்கு எதிராக திரும்பத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதனால்தான் நான் சொல்கிறேன். இது அவருக்கு சரளமான ஒரு இன்னிங்ஸ் கிடையாது. மேலும் ஐடியா ரீதியாக இது நல்ல இன்னிங்ஸ் கிடையாது. நல்ல விஷயம் என்னவென்றால் அவர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்ததால் ஆட்டத்தை முடிக்க முடிந்தது” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -