சில நாட்களுக்கு முன்பாக இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதிக்கொண்ட ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுக்கு வந்தது. இதற்குப் பிறகு ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் உயர்ந்திருக்கும் நிலையில் பவுலர்கள் சரிந்திருக்கிறார்கள்.
நடந்து முடிந்த ஜிம்பாப்வே டி20 தொடரில் ஜெய்ஸ்வால் மூன்று போட்டிகளில் 141 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு போட்டியில் ஆட்டம் இழக்காமல் அவர் 93 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக பத்தாவது இடத்தில் இருந்த அவர் தற்பொழுது 743 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
இதேபோல் ஏழாவது இடத்தில் இருந்த ருதுராஜ் ஒரு இடம் சரிந்து 684 புள்ளிகள் உடன் எட்டாவது இடத்தில் இருக்கிறார். சூரியகுமார்யாதவ் 797 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த மூன்று இந்தியா பேட்ஸ்மேன்களும் முதல் பத்து இடத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிய சுப்மன் கில் ஐந்து போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் உடன் 170 ரன்கள் எடுத்து தொடரில் அதிக ரன்கள் எடுத்தவராக வந்தார். தற்போது இவர் 36 இடங்கள் உயர்ந்து தரவரிசை பட்டியலில் 37-வது இடத்தை பிடித்திருக்கிறார்.
இதே தொடரில் 8 விக்கெட் கைப்பற்றிய முகேஷ் குமார் 73வது இடத்திலும், மேலும் எட்டு விக்கெட் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்ற வாசிங்டன் சுந்தர் 36 இடங்கள் உயர்ந்து 46-வது இடத்திற்கும் வந்திருக்கிறார்கள். அக்ச்சர் படேல்ல் 13, குல்தீப் யாதவ் 15, ரவி பிஸ்னாய் 18, பும்ரா 21 மற்றும் அர்ஸ்தீப் சிங் 23வது இடங்களுக்கு சரிந்திருக்கிறார்கள். ஒரு இந்திய பந்துவீச்சாளர் கூட முதல் 10 இடத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அர்ஷ்தீப் சிங் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடற வாய்ப்பே இப்ப இல்ல.. இதான் காரணம் – பாராஸ் மஹாம்பிரே கருத்து
ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் முதல் 10 இடங்கள் :
டிராவிஸ் ஹெட் – 844
சூர்யகுமார் யாதவ் – 797
பில் சால்ட் – 797
பாபர் அசாம் – 755
முகமது ரிஸ்வான் – 746
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 743
ஜோஸ் பட்லர் – 716
ருதுராஜ் கெய்க்வாட் – 684
பிராண்டன் கிங் – 656
ஜான்சன் சார்லஸ் – 655