தோனி ரெய்னாவை தாண்டி முன்னேறிய சூரியகுமார் யாதவ் அசத்தல் சாதனை!

0
715
Sky

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்று முன்னிலை வகிக்கிறது!

நேற்று நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ண்யித்த 177 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது!

- Advertisement -

இந்தப் போட்டியில் சர்வதேச வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் முதல்முறையாக ஒரு மெய்டன் ஓவரை விளையாடிய சூரியகுமார் யாதவ் பொறுப்பாக நின்று தன்னுடைய இன்னொரு பக்க பேட்டிங் பரிமாணத்தை காட்டினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக 34 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ஆட்டம் இழந்தார். அணி தோற்று இருந்த போதும் அவர் எடுத்த ரன்கள் மூலம் அவர் ஒரு பெரிய மதிப்புமிக்க இந்திய தரவரிசைக்குள் நுழைந்திருக்கிறார்.

அவர் மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவை தாண்டி டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். தோனி 98 ஆட்டங்களில் 1617 ரன்களையும், ரெய்னா 78 போட்டிகளில் 1605 ரன்களையும் எடுத்திருந்தார்கள். தற்பொழுது சூரியகுமார் யாதவ் 44 இன்னிங்ஸில் 1625 ரன்கள் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி – 4008
ரோகித் சர்மா – 3853
கே எல் ராகுல் – 2265
ஷிகர் தவான் – 1759
சூரியகுமார் – 1625