இந்திய கிரிக்கெட்

பேட்டர் சூர்யாவ கண்டுபிடிக்க முடியல.. அவர் எங்கேயோ தொலைஞ்சு போயிட்டார் – சூர்யா வருத்தம்

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 எனக் கைப்பற்றியது. இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா 25 பந்தில் 73 ரன்கள், திலக் வருமா 45 பந்தில் 63 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.

கடந்த தொடர்களில் இது இல்லை

இதைத்தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 35 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. வருண் சக்கரவர்த்தி நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றி குறித்து பேசி உள்ள கேப்டன் சூரியகுமார் யாதவ் “நாங்கள் தொடக்கத்தில் இருந்தே ஒரு குறிப்பிட்ட அதிரடி கிரிக்கெட் பிராண்டில் ஒட்டிக்கொள்ள விரும்பினோம். நாங்கள் எதையும் வித்தியாசமாக செய்ய முயற்சிக்கவில்லை. இது ஏற்கனவே நாங்கள் செய்து வந்ததுதான். எல்லாத் துறைகளிலும் எங்களை வெளிப்படுத்த விரும்பினோம். கடந்த தொடர்களில் இந்த இன்டெண்ட் எங்களிடம் காணாமல் போயிருந்தது”

- Advertisement -

சூர்யாவை காணவில்லை

“எங்கள் கிரிக்கெட் பிராண்டில் ஒருவர் ஆரம்பித்தால் அவர் நிறுத்த மாட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடுவார். இன்று நாங்கள் விரும்பிய விதத்தில் பேட்டிங் செய்தோம். பந்துவீச்சில் நாங்கள் புதிதாக எதையாவது செய்ய முயற்சி செய்தோம். பவர் பிளேவில் பொம்மரா ஒரு ஓவர் மட்டும் பந்து வீச வேண்டும். பிறகு அவர் ட்ரிங்க்ஸ் இடைவேளை முடிந்ததும் ஒரு ஓவரும், இறுதியில் இரண்டு ஓவர்கள் வீசவேண்டும் என்று நினைத்தோம். மேலும் வாஷிங்டன் சுந்தர் பவர் பிளேவில் அருமையாக பந்து வீசினார்”

இதையும் படிங்க : நல்ல பார்ம்ல இருந்தும்.. நான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு இதான் காரணம் – இஷான் கிஷான் ஓபன் டாக்

“ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும். இந்த தொடரில் நாங்கள் பேட்ஸ்மேன் சூர்யாவை பார்க்கவில்லை. அவர் எங்கோ தொலைந்து விட்டதாக நான் நினைக்கிறேன். ஆனால் அவர் மீண்டும் வலிமையாக திரும்பி வருவார். ஒரு கேப்டனாக இந்த தொடர் சென்ற விதத்திலும் ஆட்டம் முடிந்த விதத்திலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by