தோனி, தினேஷ் கார்த்திகை பாலோ செய்யும் சூர்யகுமார்.. பயிற்சி குறித்து மனம் திறப்பு

0
491

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய மாஸ்டர் பிளாஸ்டர் ஆக உருவெடுத்துள்ளார் சூரியகுமார் யாதவ். நேற்று நடைபெற்றுள்ள மூன்றாவது டி20 போட்டியில் இலங்கைக்கு எதிராக சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஓபனர் அல்லாத வீரர் ஒருவர் டி20 போட்டியில் அதிக  சதம் அடித்திருக்கும்  பெருமையை சூரிய குமார்யாதவ் படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தனது பேட்டிங் பயிற்சி முறை குறித்து சூரியகுமார் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பயிற்சி செய்யும் போது தமக்குத்தாமே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பயிற்சி செய்வேன் என்று குறிப்பிட்டுள்ள சூரியகுமார், இதன் மூலம் போட்டியின் போது எந்த அழுத்தமும் இல்லாமல் சுலபமாக விளையாட முடியும் என்று கூறியுள்ளார். மைதானத்தில் சுற்றளவு எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்டு பவுண்டரி எந்த திசையில் அடித்தால் எளிமையாக ரன் கிடைக்கும் என்று அந்த சாட்டை தொடர்ந்து ஆட முயற்சி செய்வேன் என்று சூர்யகுமார் கூறியுள்ளார்.

கடினமாக பயிற்சியின் போது உழைப்பேன் என்று குறிப்பிட்டுள்ள சூரிய குமார், பயிற்சியாளர் டிராவிட் தமக்கு முழு சுதந்திரம் பேட்டிங் செய்யும் போது கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். பந்துவீச்சாளர் பல வகையான திட்டத்தில் பந்து வீசும்போது பேட்ஸ்மேன்களும் அதற்கு பதில் அளிக்கும் வகையில் பல சாட்டுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார். சூரியகுமார் யாதவின் இந்த பதில் அவர் தோனி ,தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களின் திட்டத்தை ஃபாலோ செய்கிறார் என்று தெரிகிறது .

தோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பயிற்சி செய்யும் போது 6 பந்துகளில் 20 ரன்கள் அடிக்க வேண்டும் என தங்களுக்குள்ளே ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு விளையாடுவார்கள். மேலும் பில்டர்கள் நிற்பது போல் மனதில் கற்பனை செய்து கொண்டு கேப்பை பார்த்து ரன் அடித்து பயிற்சி செய்வார்கள். இந்த பயிற்சி முறை இருவருக்கும் நல்ல பலனை கொடுத்தது. தற்போது சூரிய குமார் யாதவும் இதனையே பாலோ செய்ய வருகிறார்.