“ரோகித் அவுட்டாகிட்டு போய்ட்டா இதான் நடக்குது டீம்ல”; சூரியகுமார் யாதவ் ஓபன் டாக்!!

0
1262

மூன்றாவது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற சூரியகுமார் யாதவ் போட்டி முடிந்த பிறகு மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது டி20 போட்டியில் ஆகஸ்ட் 3ஆம் தேதி விளையாடுயது. இம்முறை இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டாவது டி20 போட்டியில் அரைசதம் அடித்த பிரண்டன் கிங் இம்முறை 20 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கைல் மேயர்ஸ் மிகச்சிறப்பாக விளையாடி 50 பந்துகளில் 73 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு உயர்த்தினார். பின்னர் வந்த வீரர்கள் 20களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. 

- Advertisement -

இந்திய அணிக்காக துவங்கிய கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்கள் இருந்தபோது, காயத்தின் காரணமாக அவர் வெளியேறினார். சூரியகுமார் யாதவ் நிலைத்து நின்று விளையாடி 44 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்க, இந்திய அணிக்கு வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. கீழ் வரிசையில் ரிஷப் பண்ட் 33 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் பங்களிப்பை கொடுத்ததால், இந்திய அணி வெற்றி பெற்றது. 19 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்த இந்திய அணி, 7 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

76 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

“நான் நினைத்தபடி எனது ஆட்டம் அமைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்றால் யாரேனும் ஒரு துவக்கவீரர் 15 முதல் 17 ஓவர்கள் வரை ஆட்டமிழக்காமல் நிலைத்து ஆட வேண்டும் என நினைத்தேன். குறிப்பாக ரோகித் சர்மா ஆட்டமிழந்தபிறகு, நானும் சொற்ப ரன்ளுக்கு ஆட்டம் இழந்தால் இந்திய அணி தடுமாறி விடுகிறது. இரண்டு துவக்க வீரர்களில் ஒருவர் நன்றாக செயல்பட்டால் நிச்சயம் அணியின் வெற்றியை உறுதி செய்யலாம். இரண்டாவது டி20 போட்டியின்போது இப்படியான சம்பவம் நடந்ததை நான் நன்கு கவனித்தேன். அதனை பாடமாக எடுத்துக் கொண்டு செயல்பட்டேன். 

- Advertisement -

யாரேனும் ஒருவர் தனது ஆட்டத்தை இறுதிவரை எடுத்துச் சென்றால் நிச்சயம் வெற்றியை நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியாது. ஆகையால் அதில் மட்டுமே என் கவனம் இருந்தது. தற்போது வெற்றிக்கு பங்களித்தது என்னை நான் மகிழ்ச்சியாக பார்க்கிறேன். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது எனக்கும் நல்ல மனநிலையை கொடுக்கிறது, இந்திய அணியிலும் என்னால் தொடர்ந்து விளையாட முடிகிறது. இதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் கனவு கண்டுகொண்டு இருந்தேன்.” என்றார்.