தோனி ஊர்ல இருந்து டி20 தொடர் ஸ்டார்ட் ஆகிருக்கு, அதனால தான் இவ்ளோ அமைதியா தெரியுது – ரிப்போர்ட்டருக்கு சூசகமாக பதில் சொன்ன சூரியகுமார் யாதவ்!

0
139

இந்த டி20 தொடரில் உங்களிடம் அமைதியான அணுகுமுறை தெரிகிறதே என நிருபர் கேட்டதற்கு, மகேந்திர சிங் தோனியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார் சூரியகுமார் யாதவ்.

இந்தியா நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகள் ராஞ்சி மற்றும லக்னோ மைதானங்களில் நடைபெற்று முடிந்துவிட்டன. மூன்றாவது டி20 போட்டி பிப்ரவரி 1ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

ஒருநாள் போட்டி தொடர் மிகவும் ஆரவாரமாக அதிக ரன்கள் அடித்த போட்டிகளாக அமைந்தது. ஆனால் இந்த டி20 தொடரில் மிகவும் குறைந்த ஸ்கோர் அடிக்கக்கூடிய பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களாக அமைந்துவிட்டது. இந்திய வீரர்களும் மிகவும் சாந்தமான அணுகுமுறையை இந்த டி20 தொடர் முழுவதும் கடைபிடித்தனர்.

முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இரண்டாவது டி20 போட்டியில் 100 ரன்கள் இலக்கை கடப்பதற்கு மிகவும் ஸ்லோவாக கடைசி ஓவர் வரை எடுத்துக் கொண்டு செஸ் செய்தது.

மூன்றாவது டி20 போட்டிக்கு முன்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட சூரியகுமார் யாதவிடம், இந்திய அணி எதற்காக இப்படி அமைதியான அணுகுமுறையை டி20 போட்டிகளில் கடைபிடிக்க வருகிறது என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கொடுத்த சூரியகுமார் யாதவ்,

- Advertisement -

“இந்த டி20 தொடர் ராஞ்சி மைதானத்தில் துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக கூட இந்த அணுகுமுறை இருக்கலாம்.” என்று சிரித்தபடி சொன்னார்.

இதை வைத்துப் பார்க்கையில் மகேந்திர சிங் தோனியை சூரியகுமார் யாதவ் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார் என்று தெரிகிறது . மேலும் பேசிய சூரியகுமார் யாதவ், “மைதானங்களுக்கு ஏற்றவாறு அணுகுமுறை இருக்கும். எப்பொழுதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க முடியாது. மைதானங்கள் மற்றும் போட்டியின் சூழல் அறிந்து அணிக்கு பங்களிப்பை கொடுக்க வேண்டும். அது போன்ற ஒரு ஆட்டம் தான் இரண்டாவது டி20 போட்டியின் போது வெளிப்பட்டது. அந்த போட்டியில் நிதானமான அணுகுமுறை தேவைப்பட்டதால் அப்படி செய்தோம்.” என்றார்.