பாபர் ஆஸமை பின்னுக்கு தள்ளிய சூரியகுமார் ; டி20 ஐசிசி ரேங்க் வெளியீடு!

0
562
Sky

நேற்று கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான இரண்டு டி-20 தொடர்களின் முதல் போட்டி நடந்தது. ஒரு போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இன்னொரு போட்டியில் பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் மோதியது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தனர். அதைப்போலவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி துவக்க ஆட்டக்காரர் ரிஸ்வானின் சிறப்பான பேட்டிங்கால் 150+ ரன்களை எடுத்தது. பாபர் மீண்டும் ஸ்டிரைக் ரேட்டில் ஏமாற்றினார். இங்கிலாந்து அணி எளிதான வெற்றி பெற்றது.

இந்த இரு போட்டிகளின் முடிவுக்குப் பின்னர் ஐசிசி டி20 பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலை வெளியிட்டது. ஏற்கனவே முதலிடத்தில் இருந்த முஹம்மது ரிஸ்வான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவின் மார்க்ரம் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நேற்றைய போட்டியில் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் தனது மூன்றாவது இடத்தை இழந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலிய அணியுடன் நேற்று மிகச் சிறப்பாக பேட் செய்து 25 பந்துகளில் 46 ரன்கள் அடித்த சூர்யகுமார் யாதவ் பிடித்தார்.

நேற்றைய போட்டியில் 2 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றிய விராட் கோலி 16 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 35 பந்துகளில் 55 ரன்களை குவித்த கேஎல் ராகுல் 5 இடங்கள் உயர்ந்து 18வது இடத்தை பிடித்தார். நேற்றைய போட்டியில் வெறும் 30 பந்துகளை மட்டுமே சந்தித்து 71 ரன்களை குவித்த ஆர்டிக் பாண்டியா டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்தார்.

டி20 பேட்மேன்களுக்கான ஐசிசியின்
டாப் 10 தரவரிசைப் பட்டியல் :

முஹம்மது ரிஸ்வான்
எய்டன் மார்க்ரம்
சூர்யகுமார் யாதவ்
பாபர் ஆசம்
டேவிட் மலான்
ஆரோன் பின்ச்
டெவோன் காண்வோ
பதும் நிசங்கா
மோகமத் வாசீம்
ரீசா ஹென்ரிக்ஸ்