எங்கள் இருவருக்கும் இடையே இது போன்ற சண்டைகள் அடிக்கடி நடக்கும் – சூர்யகுமார் யாதவ் விளக்கம்

0
713
Suryakumar Yadav and Chahal banter

மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 52 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டத்தின் கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார்.

சஹாலை சமாதானப்படுத்திய சூர்யகுமார் யாதவ்

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கிறீர்கள் 41 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் கிழக்கு வருமா இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சூர்யகுமார் யாதவ் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கையில் எட்டாவது ஓவரை சஹால் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவ் தடுப்பாட்டம் போட்டார். வந்து அவருடைய லெக்பேடில் பட்டது. உடனடியாக சஹால் ஆல் அவுட் கேட்டார். கள நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். உடனடியாக கேப்டன் சஞ்சு சாம்சன் ரிவ்யூ எடுத்தார்.

மூன்றாவது நடுவர் மறுஆய்வு செய்து பார்க்கையில், பந்து ஆஃ ஸ்டம்ப்புக்கு லேசாக உரசி சென்றது. அதிர்ஷ்டவசமாக அம்பயர்ஸ் கால் முறையில் சூர்யகுமார் யாதவ் தப்பித்துக் கொண்டார். இதனால் சஹால் சற்று விரக்தி அடைந்தார்.
சூர்யகுமார் உடனடியாக சென்று சஹாலை கட்டி பிடித்து அவரை ஆறுதல் படுத்தினார். இவர்கள் இருவரும் அன்பு பரிமாறிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

எங்களுக்குள் எந்தவித சண்டையும் நடக்கவில்லை

மேற்கூறிய சம்பவம் குறித்து தற்பொழுது சூர்யகுமார் யாதவ் விளக்கம் தெரிவித்துள்ளார். “நேற்றைய போட்டியில் எனக்கும் சஹாலுக்கும் ஆட்டத்தில் போட்டி இருந்ததே தவிர எங்கள் இருவருக்கும் எந்தவித சண்டையும் போட்டியும் இல்லை. நேற்று நாங்கள் இருவரும் செல்லமாக ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டோம். மற்றபடி எங்கள் இருவருக்கும் எந்தவிதமான சண்டையும் நேற்று நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.

8 போட்டிகளில் தோல்வி பெற்று நேற்றைய போட்டியில் முதல் வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி ருசி பார்த்தது. அதையும் குறிப்பிட்டு கூறியுள்ள சூர்யகுமார், “நேற்றைய போட்டியில் கிடைத்த வெற்றி எங்களுடைய அணி வீரர்கள் அனைவருக்கும் நிறைய பாசிட்டிவிட்டியை கொடுக்கும். தொடரில் இனிவரும் போட்டிகளை நாங்கள் உற்சாகத்துடன் எதிர்கொள்ள இது ஒரு உந்துதலாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.