டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதிப்பேன்.. சூர்யகுமார் யாதவ் உறுதி

0
470

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்து இருக்கிறார் சூரியகுமார் யாதவ். 32 வயதில் டி20 கிரிக்கெட் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை சூரியக்குமார் யாதவ் பெற்றார். மேலும் ஒரே ஆண்டில் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஆயிரம் கண்களுக்கு மேல் குவித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்று இருக்கிறார்.

நேற்று நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 49 பந்துகளில் சதம் விளாசி சூரியகுமார் யாதவ் அசத்தினார். இந்த நிலையில் செய்தியாளர்களுடன் பேசிய சூர்ய குமார் யாதவ், டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாடும் போது அனைவருமே டெஸ்ட் போட்டியில் தான் முதலில் விளையாடுகிறோம். நான் மும்பை அணிக்காக சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன்.

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்று எனக்கு தெரியும். டெஸ்ட் போட்டி விளையாடும் போது நான் மகிழ்ச்சியாக இருப்பேன். எனக்கு விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இப்போதெல்லாம் நான் கடந்த காலத்தை குறித்து அதிகமாக யோசிக்கிறேன். எங்கு இருந்தாலும் சரி, மனைவியுடன் பேசும்போது கூட மூன்றாண்டுகளுக்கு முன் நமது நிலைமை எப்படி இருந்தது. தற்போது எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என்பது குறித்து தான் பேசுவோம்.

கடந்த காலங்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்காத போது மிகவும் கடுப்பாக இருக்கும். ஆனால் அந்த சூழ்நிலையிலும் ஏதாவது ஒரு நல்லது நடக்கும் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோம். நல்ல கிரிக்கெட் வீரராக எப்படி பெயர் வாங்குவது என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன். கடினமான சூழல்கள் நிலவும் போது நாம் ஒரு நேரத்திற்கு ஒரு படி என்று கவனம் செலுத்தி எதிர்காலத்தை குறித்து கவலைப்பட கூடாது என்று தெரிவித்துள்ளார்.

சூரியகுமார் யாதவ், உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் 77 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். இதில் அவர் 5,326 ன்கள் அடித்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சூரிய குமார் இந்திய டெஸ்ட் அணியில் கூடுதல் வீரராக தேர்வு செய்யப்பட்டார். எனினும் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சூர்யகுமார் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.