மும்பை அணியின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தன் விஸ்வாசத்தை நிரூபித்த சூர்யகுமார் யாதவ் – இஷான் கிஷன் வெளியேறியதற்கு இதுதான் காரணம்

0
499
Ishan Kishan and Suryakamar Yadav

மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைக்க போகின்ற வீரர்கள் ரோஹித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, கிரோன் பொல்லார்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய நால்வர் தான் என்று தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ பிறப்பித்த நிபந்தனைகளின் அடிப்படையில் சூரியகுமார் யாதவுக்கு 6 கோடி ரூபாய் வருவாயாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் மூலமாக வழங்கப்படும்.

ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கப்போகும் வீரர்களின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கும் நிலையில், அனைத்து முடிவுகளையும் அணி நிர்வாகமே எடுக்கும் என்று சொல்லிவிட முடியாது. அணி நிர்வாகம் கூறும் தொகை சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு ஏதுவானதாக இருந்தால் மட்டுமே வீரர்கள் அந்த அணி நிர்வாகத்தின் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் விசுவாசி என்று நிரூபித்த சூரியகுமார் யாதவ்

மும்பை இந்தியன்ஸ் அணியில் மிக சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் கிடைத்து தற்போது சர்வதேச அளவில் ஜொலித்து வரும் வீரர் என்றால் அது சூர்யகுமார் யாதவ் தான். மும்பை இந்தியன்ஸ் அணியின் 4-வது வீரராக அவர் தக்கவைக்க படுவதன் மூலமாக அவருடைய ஒப்பந்த தொகை வெறும் 6 கோடி ரூபாயாக மட்டுமே பதிவாகும்.

சூர்யகுமார் யாதவ் நினைத்து இருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒப்பந்தத்தை ஏற்காமல் மெகா ஏலத்தில் தன்னுடைய பெயரை இணைத்துக் கொண்டு, மிகப்பெரிய தொகைக்கு வேறு ஏதேனும் ஒரு அணிக்கு சென்று இருக்கலாம். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி மீது தான் வைத்த விசுவாசத்தை கைவிடாமல், மும்பை அணி நிர்வாகம் கூறிய தொகைக்கு மனதார சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையப்பமிட்டு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மறுபக்கம் ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் மும்பை அணி நிர்வாகம் கூறிய ஒப்பந்த தொகை தங்களுக்கு குறைவாக பட்ட காரணத்தினால் சம்மதம் தெரிவிக்கவில்லை. எனது அடுத்த வருடம் அவர்கள் மெகா ஏலத்தில் கலந்து போவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களைப் போன்று இல்லாமல் குறைவான தொகையே என்றாலும், மனதார மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒப்பந்தத்தில் சூர்யகுமார் யாதவ் கையொப்பமிட்ட விஷயம் அனைத்து மும்பை அணி ரசிகர்களையும் தற்போது ஆச்சரியபட வைத்துள்ளது.