அவரின் செய்கை மனதிற்கு இதமாக இருந்தது – சூரியகுமார் யாதவ் நெகிழ்ச்சி!

0
84
Sky

15வது ஆசிய கோப்பையில் இந்திய அணி ஆங்காங் அணியுடன் மோதிய போட்டியில் இரண்டு நல்ல விஷயங்களும் இரண்டு மகிழ்ச்சி தராத விஷயங்களும் நடந்துள்ளன. நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 42 வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு பின் அணிக்கு வந்துள்ள கேஎல் ராகுல் நேற்று ஹாங்காங் அணியுடனான போட்டியில் திரும்ப தனது பழைய ஃபார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று அவர் ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தடுமாறி வந்தார். மேலும் 39 பந்துகளைச் சந்தித்த அவர் முப்பத்தி ஆறு ரன்களை மட்டுமே எடுத்தார். 13வது ஓவர் வரை களத்தில் இருந்த அவர் அதிரடியாய் விளையாட முயற்சி செய்தாலும் முடியவில்லை.

- Advertisement -

பந்துவீச்சில் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான் இருவரும் ரன்களை விட்டுக் கொடுத்தார்கள். குறிப்பாக ஆவேஸ் கான் தனது பந்துவீச்சில் 53 ரன்களை 4 ஓவர்கள் வீசி விட்டுக் கொடுத்தார். அர்ஸ்தீப் சிங் வழக்கமாக நன்றாக வீசக்கூடிய பந்துவீச்சாளர்தான். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட் சூழ்நிலையில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

ஆனால் இன்னொரு புறத்தில் பேட்டிங்கில், ஒருமாத ஓய்விற்குப் பிறகு திரும்ப வந்த விராட் கோலி அரைசதம் அடித்து மீண்டும் தனது பழைய ஃபார்மில் ஓரளவுக்கு திரும்ப வந்திருக்கிறார் என்று கூறவேண்டும். நேற்று 5 ஓவர்கள் முடிந்து களத்திற்கு வந்த அவர் முதலில் நிதானமாக ஆரம்பித்து பின்பு தேவைக்குத் தகுந்தபடி கொஞ்சம் அதிரடியாகவும் ஆடி ரன்களை கொண்டு வந்தார். இவரது இந்த ஆட்டம் அணி நிர்வாகத்திற்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்.

பாகிஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் நான்காவது இடத்தில் வரமுடியாத சூரியகுமார் இந்த ஆட்டத்தில் நான்காவது இடத்தில் வந்ததோடு 7 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்த ஆட்டத்தில் 26 பந்துகளில் 6 சிக்ஸர் 6 பவுண்டரி என அறுபத்தி எட்டு ரன்களை குவித்து மிரட்டி விட்டார். இதில் கடைசி ஓவரில் மட்டும் 4 சிக்சர்களை விளாசினார். அந்த ஓவரில் 26 ரன்கள் மொத்தமாக வந்தது. சர்வதேச டி20 போட்டியில் கடைசி ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும்.

- Advertisement -

நேற்று இந்திய அணி பேட்டிங்கை முடித்துக்கொண்டு வெளியேறுகையில் சூரியகுமார் விராட் கோலி தலைவணங்கி பாராட்டு தெரிவித்தார். சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரல் ஆனது. இது குறித்து சூர்யகுமார் யாதவ் இடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் இந்த போட்டி குறித்தும் கேள்வி எழுப்பினார்கள்.

போட்டி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ் ” நான் களத்திற்கு வந்த பொழுது வேகமாக அடித்து ஆட வேண்டிய சூழ்நிலை இருந்தது. முன்பு ஆடுகளம் மெதுவாக இருந்ததால் ரன்கள் வரவில்லை. விராட் கோலியிடம் பேசிய பொழுது அவர் உன் வழக்கமான பாணியில் வேகமாக விளையாடு என்று கூறினார். ஆட்டத்தின் திட்டம் என்னிடம் தெளிவாக இருந்தது அதனோடு நான் எப்பொழுதும் போல் உள்ளே வேடிக்கையாகவும் விளையாடினேன் ” என்று தெரிவித்தார்.

விராட் கோலி தலைவணங்கி பாராட்டு தெரிவித்தது தொடர்பாக கூறிய சூர்யகுமார் யாதவ் ” அது மிகவும் மனதிற்கு இதமாக இருந்தது. இப்படியெல்லாம் நான் பார்த்ததே இல்லை. ஆட்டம் முடிந்து வெளியேறி போகும் பொழுது அவர் முன்னே வரவில்லை. நான் அவரிடம் சேர்ந்து வருமாறு கூறி ஒன்றாக நடந்து சென்றேன். அவர் அப்படித்தான் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவருடன் இணைந்து பேட் செய்வது மிகவும் விருப்பத்திற்குரிய ஒன்று” என்று தெரிவித்தார்!