ரஞ்சி டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் டி20 அதிரடி ஆட்டம்!

0
5971
Sky

இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பான ரஞ்சி டெஸ்ட் தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் இந்தத் தொடரில் ஜொலிக்க கூடிய வீரர்களே இதுவரை இந்திய அணியில் முக்கிய இடங்களை வகித்து வந்தார்கள்!

தற்பொழுது விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி, ஐபிஎல் தொடர்களில் இருந்து வீரர்கள் இந்திய அணிக்குள் வந்தாலும், ரஞ்சித் தொடருக்கு இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் இடமும் மரியாதையும் முக்கியத்துவமும் தனித்துவமானது!

இப்படியான நிலையில் தற்பொழுது இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட் அணியில் குறிப்பாக டி20 கிரிக்கெட் அணியில் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் ஆக உருவெடுத்துள்ள சூரியகுமார் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் நுழைவதற்கு பெரும் விருப்பத்தை காட்டி வருகிறார்!

இதில் ஒரு பகுதியாக இன்று துவங்கிய மும்பை ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை அணியில் இடம் பெற்று டெஸ்ட் போட்டியில் அதிரடியான தனது வழக்கமான ஆட்டத்தை காட்டினார்!

பிரிதிவிஷா ஆட்டம் இழக்க மூன்றாவது வீரராக களம் புகுந்த சூரியகுமார் யாதவ் 80 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 90 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து இருக்கிறார். இன்னொரு புறத்தில் ஜெய்ஸ்வால் சதம் அடித்தும் ரகானே அரைசதம் அடித்தும் விளையாடி வருகிறார்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெறுவதற்கான ஓட்டத்தில் இந்திய அணிக்கு உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாட இருக்கும் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது. இந்த டெஸ்ட் தொடரில் எப்படியாவது இந்திய அணிக்குள் இடம் பெற வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காக தற்பொழுது சூரிய குமார் மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் களம் இறங்கி தன்னை நிரூபித்தும் இருக்கிறார். இந்திய அணியில் இவர் இடம்பெற்றால் இறங்கக்கூடிய இடம் கீழேதான் இருக்கும். இந்த இடத்தில் இப்படியான அதிரடி ஆட்டம்தான் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது!